சச்சின் – டிராவிட் ஆகியோரது சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரோஹித் – கோலி ஜோடி – விவரம் இதோ

ROKO
- Advertisement -

இந்திய அணியானது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை (0-2) பூஜ்யத்திற்கு இரண்டு என்ற கணக்கில் இழந்தது. அதற்கடுத்து தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடரானது எதிர்வரும் நவம்பர் 30-ம் தேதி முதல் துவங்குகிறது.

ஒன்றாக சாதனை நிகழ்த்த காத்திருக்கும் ரோஹித் – கோலி :

ஏற்கனவே டெஸ்ட் தொடரினை இழந்த இந்திய அணியானது அந்த தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக ஒருநாள் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் தயாராகி வருவதால் இந்த தொடரானது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதோடு இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரும் விளையாட இருப்பது பெரிய அளவில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே வரும் நவம்பர் 30-ஆம் தேதி ராஞ்சி நகரில் துவங்க இருக்கும் முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாட இருக்கும் அவர்கள் இருவரும் முன்னாள் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரது சாதனையை முறியடிக்க காத்திருக்கின்றனர்.

அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் அவர்கள் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிகமுறை ஒன்றாக இணைந்து விளையாடிய ஜோடி என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் தங்கள் வசம் வைத்திருந்தனர்.

- Advertisement -

அவர்கள் இருவரும் 391 சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக ஒன்றாக விளையாடியுள்ளனர். அவர்களது இந்த சாதனையை சமன் செய்துள்ள ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஒன்றாக பங்கேற்கும் பட்சத்தில் அந்த சாதனையை முறியடிக்க உள்ளனர்.

இதையும் படிங்க : அவமானப்பட்ட இந்தியா 2027 ஃபைனலுக்கு செல்ல.. இப்போவாச்சும் ஸ்பின் பிளேயர்களை எடுங்க.. பதான் பேட்டி

அதாவது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் ஒன்றாக 392 போட்டிகளில் இணைந்து விளையாடி சச்சின் மற்றும் டிராவிட் சாதனையை முறியடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement