அவமானப்பட்ட இந்தியா 2027 ஃபைனலுக்கு செல்ல.. இப்போவாச்சும் ஸ்பின் பிளேயர்களை எடுங்க.. பதான் பேட்டி

Irfan Pathan
- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 2 – 0 (2) என்ற கணக்கில் இந்தியா சொந்த மண்ணில் 25 வருடங்கள் கழித்து தோற்றது. ஏற்கனவே கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிராகவும் சொந்த மண்ணில் இந்தியா முதல் முறையாக வரலாறு காணாத ஒய்ட்வாஷ் தோல்வியை சந்தித்தது. அந்த வகையில் சொந்த மண்ணிலேயே திணறும் இந்திய அணி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

இந்நிலையில் சொந்த மண்ணில் இந்தியா அடுத்தடுத்த ஒயிட்வாஸ் தோல்விகளைச் சந்தித்தது மிகப்பெரிய அவமானம் என்று முன்னாள் வீரர் இப்ரான் பதான் வேதனை தெரிவித்துள்ளார். அடுத்ததாக இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா தலா 2 போட்டிகளில் விளையாட உள்ளது. அத்துடன் 2027ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தங்கள் சொந்த மண்ணில் இந்தியா 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

- Advertisement -

அவமானத் தோல்வி:

அந்த 9 போட்டிகளில் 7 வெற்றிகளைப் பெற்றால் மட்டுமே இந்தியா 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும். அதற்கு இனிமேலாவது இந்திய அணி ஸ்பின் பவுலர்களை நன்றாக எதிர்கொள்ளும் பேட்ஸ்மேன்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பதான் கேட்டுக்கொண்டுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா விளையாடிய விதம் அவமானமாக இருந்தது. நியூசிலாந்துக்கு எதிராக மோசமாக தோற்ற அவர்கள் தற்போது தென்னாப்பிரிக்காவிடமும் வீழ்ந்துள்ளார்கள். அத்தொடர்களில் உங்களிடம் பேட்டிங், பவுலிங் ஆகியவற்றில் திறன் இருந்ததாக தெரியவில்லை. நியூசிலாந்தின் மிட்சேல் சான்ட்னர் செய்ததை தற்போது சைமன் ஹார்மர் செய்தார்”

- Advertisement -

பதான் கோரிக்கை:

“ஸ்பின்னர்களுக்கு எதிராக நம்முடைய டெக்னிக் மோசமாக இருப்பதால் நாம் முன்னேற வேண்டும். சைமன் ஹார்மர் தன்னுடைய அபாரமான வேரியசனால் இந்திய ஸ்பின்னர்களை முந்திச் சென்றார். ரபாடா போன்ற முதன்மை பவுலர் இல்லாமலேயே தென்னாப்பிரிக்கா நம்மை சொந்த மண்ணில் தோற்கடித்துள்ளது. அதே போல பும்ராவை விட பேட்டிங், பவுலிங் ஆகியவற்றில் மார்கோ யான்சென் நம்மை முந்தினார். ஒருவேளை பும்ரா ஓய்வெடுத்திருந்தால் நமக்கு இன்னும் திண்டாட்டம் ஏற்பட்டிருக்கும்”

இதையும் படிங்க: எந்த தப்பும் செய்யாத கம்பீரை எதுக்கு போகனும்? அதுவரை கோச்’சாக இருப்பாரு.. பிசிசிஐ செயலாளர் அறிவிப்பு

“இனிமேலாவது உள்ளூரில் ஸ்பின்னர்களுக்கு எதிராக நன்றாக விளையாடும் பேட்ஸ்மேன்களுக்கு நீங்கள் வாய்ப்பளிக்க வேண்டும். சர்பராஸ் கான் போன்றவரை அணியில் எடுக்காதது என்னுடைய புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. அடுத்ததாக நீங்கள் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் வெளிநாட்டில் இலங்கைக்கு எதிராகவும் விளையாட உள்ளீர்கள். அங்கே வெற்றி பெறுவதற்கு சுழல் பந்துகளை நன்றாக எதிர்கொள்ளும் பேட்ஸ்மேன்களுக்கு வாய்ப்பளியுங்கள்” என்று கூறினார்.

Advertisement