- Advertisement -
இந்திய கிரிக்கெட்

டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தாலும் தற்போது வரை கெத்து காட்டும் ரோஹித் சர்மா மற்றும் கோலி – விவரம் இதோ

இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவ வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அண்மையில் நடைபெற்ற முடிந்த டி20 உலக கோப்பை தொடருடன் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியவுடன் இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சிகள் ஆழ்ந்திருந்த வேளையில் ஒரு சில மணி நேரங்களிலேயே அவர்கள் இருவரும் அடுத்தடுத்து டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தையே ஏற்படுத்தியது.

ஏனெனில் வயதுமிகுந்த வீரராக இருந்தாலும் இன்றளவும் அவர்கள் இருவரும் டி20 கிரிக்கெட்டில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் போதும் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட இருந்த கம்பீரின் அழுத்தம் காரணமாகவே அவர்கள் ஓய்வை அறிவித்தார்கள் என்று பரவலாக பேசப்பட்டது.

- Advertisement -

என்னதான் டி20 கிரிக்கெட்டில் இருந்து அவர்கள் இருவரும் ஓய்வு பெற்றாலும் தற்போது அவர்கள் டி20 கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் பிடித்துள்ள இடம் அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. சர்வதேச டி20 போட்டிகள் பொறுத்தவரை 50 வெற்றிகளை பெற்ற ஒரே கேப்டனாக ரோகித் சர்மா சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

அதேபோன்று டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற பட்டியலிலும் மேக்ஸ்வெல்லுடன் ரோகித் சர்மா முதலிடத்தினை பகிர்ந்து கொண்டுள்ளார். அதேபோன்று டி20 உலக கோப்பை தொடரில் ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காமல் கோப்பையை வென்ற முதல் கேப்டன் என்ற பெருமையும் அவர் படைத்திருந்தார்.

- Advertisement -

இப்படி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவர் ஒருபுறம் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி உள்ள வேளையில் விராட் கோலியும் டி20 கிரிக்கெட்டில் அதிக முறை ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதினை வென்ற வீரர் என்ற சாதனையை செய்துள்ளார். அண்மையில் இவர்கள் இருவரும் ஓய்வை அறிவித்தாலும் அவர்களின் மவுசு இன்னும் குறையவில்லை என்றே கூறலாம்.

இதையும் படிங்க : இதை செஞ்சா போதும் 37 வயதில் சச்சினின் உலக சாதனையை ஜோ ரூட் உடைக்கலாம்.. ரிக்கி பாண்டிங் பேட்டி

ஏனெனில் ஐசிசி வெளியிட்ட டி20 தரவரிசை பட்டியலில் இன்றளவும் ரோகித் சர்மா 45-வது இடத்திலும், விராட் கோலி 52-வது இடத்திலும் இருக்கின்றனர். ஓய்வை அறிவித்த வீரர்களின் பெயர் தரவரிசை பட்டியலில் இருந்து நீக்கப்படும் வேளையில் அவர்கள் இன்றளவும் தரவரிசை பட்டியலில் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -