IND vs WI : சேவாக் – வாசிம் ஜாபர் ஜோடியின் சாதனையை 21 ஆண்டுகள் கழித்து காலிசெய்த ரோஹித் – ஜெய்ஸ்வால் கூட்டணி

Openers
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 150 ரன்கள் மட்டுமே குவித்தது. இந்திய அணி சார்பாக அஷ்வின் 5 விக்கெட்டுகளையும், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.

IND vs WI 1

- Advertisement -

அதனை தொடர்ந்து தற்போது தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் இந்திய அணியானது இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 312 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலம் இந்திய அணி 162 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள வேளையில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணியின் துவக்க வீரர்கள் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா ஆகியோரது ஜோடி சேவாக் மற்றும் வாசிம் ஜாபர் ஆகியோர் படைத்த 21 ஆண்டுகால சாதனையை முறியடித்து அசத்தியுள்ளது.

Jaiswal and Rohit

அந்த வகையில் கடந்த 2002-ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சேவாக் மற்றும் வாசிம் ஜாபர் ஆகியோரது ஜோடி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக முதல் விக்கெட்டுக்கு 201 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். அதுவே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணியின் துவக்க வீரர்கள் அமைத்த அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாக இருந்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய ரோகித் சர்மா மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 229 ரன்கள் சேர்த்து சேவாக் மற்றும் வாசிம் ஜாபர் ஆகியோரது சாதனையை முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : IND vs WI : முதல் போட்டியிலேயே செஞ்சுரி அடித்த யாஷஸ்வி ஜெய்ஸ்வால் படைத்த சாதனைகள் – என்னென்ன தெரியுமா?

இந்த முதல் இன்னிங்சில் முதல் விக்கெட்டாக ரோகித் சர்மா 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறிய வேளையில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 143 ரன்களுடன் களத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த முதலாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியில் வலது கை, இடது கை பேட்ஸ்மேன்கள் துவக்க வீரர்களாக இருந்தால் பலம் என்று ரோஹித் கூறியிருந்த வேளையில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அறிமுகமான இந்த முதல் போட்டியிலேயே அவர்களது ஜோடி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement