டெஸ்ட் கிரிக்கெட்டில் பிரமாண்டமான உலக சாதனையை நிகழ்த்தி அசத்திய – ரோஹித் சர்மா ஜெய்ஸ்வால் ஜோடி

Jaiswal
- Advertisement -

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கான்பூர் நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய வங்கதேச அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 233 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

ரோஹித் சர்மா – ஜெய்ஸ்வால் நிகழ்த்திய சாதனை :

இந்திய அணி சார்பாக பும்ரா 3 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ், ரவிச்சந்திரன் அஸ்வின், ஆகாஷ் தீப் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினர். ஏற்கனவே இந்த போட்டியின் இரண்டாம் நாள் மற்றும் மூன்றாம் நாள் ஆகியவை மழை காரணமாக தடைபட்டது.

- Advertisement -

அதன்காரணமாக இன்றைய நான்காம் நாளான இன்று தான் இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது. இந்த முதல் இன்னிங்சின் துவக்கத்திலிருந்தே இந்திய அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்து வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கி விளையாடிய ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா ஆகியோரது ஜோடி தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் மாபெரும் வரலாற்று சாதனை ஒன்றினை முறியடித்து அசத்தியுள்ளது. அதாவது இந்த போட்டியில் விளையாடிய ரோஹித் மற்றும் ஜெயிஸ்வால் ஆகியோரது ஜோடி முதல் மூன்று ஓவர்களிலேயே 50 ரன்கள் தொட்டு அசத்தியது.

- Advertisement -

இதன் மூலமாக வேகமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 50 ரன்கள் அடித்த ஜோடி என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது. இதற்கு முன்னதாக இந்த ஆண்டு ஆரம்பத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர்கள் 4.2 ஓவர்களில் 50 ரன்கள் அடித்திருந்த வேளையில் தற்போது வெறும் மூன்று ஓவர்களிலேயே 50 ரன்கள் அடித்து ரோஹித் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோரது ஜோடி சாதனை நிகழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க : சென்னையை விட்டு போறது ரொம்ப கஷ்டமா தான் இருக்கு.. எனக்காக இதை பண்ணுங்க – பிராவோ வேண்டுகோள்

அதோடு டெஸ்ட் கிரிக்கெட்டில் 50 ரன்கள் பாட்னர்ஷிப் வைத்து வேகமாக அடித்த ஜோடி என்ற சாதனையும் நிகழ்த்தியுள்ளது. ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் ஆகியோர் இந்த போட்டியில் 23 பந்துகளை சந்தித்து 55 ரன்கள் சேர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement