இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது செப்டம்பர் 27-ஆம் தேதி கான்பூர் நகரில் துவங்கி நடைபெற்றது. இந்த போட்டியின் முதல் நாளில் 36 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட வேளையில் பெய்த கன மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அதனை தொடர்ந்து இரண்டாவது நாள் மற்றும் மூன்றாவது நாள் என அடுத்தடுத்து மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
ரோஹித் மற்றும் கம்பீர் ஆகியோரது முடிவு :
இதன் காரணமாக நிச்சயம் இந்த இரண்டாவது போட்டியின் முடிவு கிடைக்காது என்று பலரும் நினைத்த வேளையில் நான்காம் நாள் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது வங்கதேச அணிக்கு எதிராக அதிரடியான ரன் குவிப்பை வழங்கியது. அதோடு போட்டியின் நான்காம் நாள் இறுதியிலும், ஐந்தாம் நாளிலும் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தியது.
இதன் காரணமாக இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றதோடு மட்டுமின்றி இந்த தொடரையும் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் இந்த இரண்டாவது போட்டியின் வெற்றிக்கு பின்னால் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோர் எடுத்த முடிவே காரணமாக பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் கம்பீர் மற்றும் ரோஹித் ஆகியோரது இணை இந்த போட்டியில் முடிவு கிடைக்க வேண்டும் என்பதற்காக வீரர்களை பிரத்தியேக மீட்டிங்கிற்கு அழைத்து போட்டியின் நான்காம் நாளான அன்று என்ன நடந்தாலும் வங்கதேச அணியை விட ரன்களை அதிகமாக குவிக்க வேண்டும் என்றும் அதுவும் எவ்வளவு விரைவாக ரன்களை குவிக்க முடியுமோ அந்த அளவிற்கு வேகமாக பேட்டிங் செய்யும்படி கேட்டுக்கொண்டனர். மேலும் முதல் இன்னிங்சின் போது இந்திய அணி விரைவில் ஆட்டம் இழந்தாலும் பரவாயில்லை என்று கூறிய அவர்கள் விரைவாக ரன்களை சேர்க்க அறிவுறுத்தி இருக்கின்றனர்.
அதோடு முதல் இன்னிங்சில் 50 ரன்கள் முன்னிலை பெற்ற வேளையில் பந்துவீச்சாளர்களை சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதற்காக எந்த பவுலர் வேண்டுமென்றாலும் தொடர்ச்சியாக பந்துவீச தயாராக இருக்க வேண்டும் என்று கூறியதோடு மட்டுமின்றி அஸ்வின், பும்ரா, ஜடேஜா ஆகியோரை சுழற்சி முறையில் தொடர்ச்சியாக ரோகித் சர்மா பயன்படுத்தி வங்கதேச அணியை விரைவில் வீழ்த்தினார்.
இதையும் படிங்க : பும்ராவுக்கு மேல.. ரோஹித் சொன்னாரு.. அவரோட அதிரடிக்கு விராட் கோலி தான் காரணம்.. அபிஷேக் நாயர்
இப்படி பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் என்ன செய்ய வேண்டும்? என்ற தெளிவான திட்டமிடுதலை ரோகித் சர்மா மற்றும் கம்பீர ஆகியோர் மேற்கொண்டதாலயே இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது. போட்டியின் கடைசி இரண்டு நாட்களில் இப்படி ஒரு வெற்றியை யாருமே எதிர்பார்க்காத வேளையில் அதை ரோஹித் சர்மா மற்றும் கம்பீர் ஆகியோரது ஜோடி செய்து காண்பித்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.