பும்ராவுக்கு மேல.. ரோஹித் சொன்னாரு.. அவரோட அதிரடிக்கு விராட் கோலி தான் காரணம்.. அபிஷேக் நாயர்

Abhishek Nayar
- Advertisement -

சென்னை மற்றும் கான்பூரில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 280 ரன்கள் மற்றும் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதனால் பாகிஸ்தானை போல வீழ்த்துவோம் என்று எச்சரித்த வங்கதேசத்தை 2 – 0 (2) என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்து இந்தியா தோற்கடித்தது. குறிப்பாக கான்பூரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியின் 2 நாள் ஆட்டங்கள் மழையால் ரத்து செய்யப்பட்டது.

அதனால் டிராவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்தப் போட்டியில் கடைசி 2 நாட்களில் வங்கதேசத்தை சொல்லி அடித்த இந்தியா அற்புதமான வெற்றி பெற்றது. அப்போட்டியில் ஜெய்ஸ்வால், ரோஹித், விராட் கோலி, ராகுல் உள்ளிட்ட அனைத்து இந்திய பேட்ஸ்மேன்களும் அதிரடியாக விளையாடி பங்காற்றினர். குறிப்பாக டெயில் எண்டரான ஆகாஷ் தீப் 10வது இடத்தில் களமிறங்கினார்.

- Advertisement -

அசத்திய ஆகாஷ் தீப்:

அந்த வாய்ப்பில் வங்கதேசத்தின் அனுபவமிக்க சாகிப் அல் ஹசனுக்கு எதிராக அடுத்தடுத்த சிக்சர்களை அடித்த அவர் 12 (5) ரன்கள் விளாசி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார். அவருடைய ஆட்டத்தை பெவிலியனில் இருந்து பார்த்த விராட் கோலி பெருமையுடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஏனெனில் கடந்த சில வாரங்களுக்கு முன் ஆகாஷ் தீப் அன்பாக கேட்டதற்காக தம்முடைய எம்ஆர்எப் முத்தரையிட்ட பேட் ஒன்றை விராட் கோலி பரிசாக கொடுத்திருந்தார்.

அந்த பேட்டை பயன்படுத்தி தான் இந்தப் போட்டியில் ஆகாஷ் தீப் அடுத்தடுத்த சிக்ஸர்களை அடித்தார். இந்நிலையில் விராட் கோலியின் பேட்டில் விளையாடியதே ஆகாஷ் தீப்புக்கு பெரிய தன்னம்பிக்கையும் ஃபார்மையும் கொடுத்ததாக இந்திய கிரிக்கெட் அணியின் துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயகர் தெரிவித்துள்ளார். வருங்காலங்களில் அவர் அஸ்வின், ஜடேஜாவை போல பவுலிங் ஆல் ரவுண்டராக வருவதற்கு வாய்ப்புள்ளதாகவும் அபிஷேக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

விராட் கோலியின் பேட்:

இது பற்றி ஜியோ சினிமா சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி அவருக்கு பேட்டை கொடுத்தார். அந்த பேட்டிலிருந்து அவருக்கு ஆட்டோமேட்டிக்காக ஃபார்ம் கிடைத்துள்ளது. உண்மையில் அவர் வலைப்பயிற்சியில் எங்களை கவரும் செய்யும் அளவுக்கு பேட்டிங் செய்தார். நாங்கள் பும்ரா அல்லது ஆகாஷ் தீப் ஆகியோரில் யாரை மேலே அனுப்புவது என்ற பேச்சு வார்த்தை நடத்தினோம்”

இதையும் படிங்க: இந்த 2 பசங்க வருங்காலத்தில் வெளிநாட்டின் இந்தியாவின் தூண்களாக இருப்பாங்க.. அஸ்வின் நம்பிக்கை

“அப்போது ஆகாஷ் தீப் துலீப் கோப்பையிலும் ரன்கள் அடித்துள்ளதால் அவரை மேலே அனுப்பலாம் என்று ரோஹித் சர்மா சொன்னார். உள்ளூர் தொடரில் லோயர் ஆர்டரில் அரை சதமடித்துள்ள அவர் எங்களுடைய ஃபார்மில் உள்ள ஒரு வீரர். பேட்டிங்கில் ஆகாஷ் தீப் வருங்காலங்களில் ஆல் ரவுண்டராக கூட வரலாம்” என்று கூறினார்.

Advertisement