சச்சின் கங்குலியை தொடர்ந்து இந்திய ஓப்பனர்களாக தனித்துவமான சாதனையில் இணைந்த – ரோஹித் தவான் ஜோடி

Openers
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி நேற்று லண்டன் கென்னிங்டன் மைதானத்தில் நடைபெற்ற முடிந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது மட்டுமின்றி 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதன்படி இந்த போட்டியில் முதலாவதாக விளையாடிய இங்கிலாந்து அணி இந்திய அணியின் பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் 25.2 ஓவர்களில் 110 ரன்களை மட்டுமே குவித்தனர்.

IND vs ENG Jasprit Bumrah

- Advertisement -

பின்னர் 111 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 18.4 ஓவர்களில் விக்கெட் ஏதும் இழக்காமல் 114 ரன்கள் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர்களான ரோகித் சர்மா 76 ரன்களையும், தவான் 31 ரன்களையும் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் இவர்களின் இந்த அருமையான பார்ட்னர்ஷிப் தற்போது சில குறிப்பிட்ட முக்கியமான சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளது. அதன்படி கடந்த 2013ம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக துவக்க வீரர்களாக இணைந்து விளையாடி வரும் இவர்கள் இருவரும் நேற்றைய போட்டியின் போது 21 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த வேளையில் ஒரு நாள் கிரிக்கெட்டில் துவக்க வீரர்களாக 5000 ரன்களை பார்ட்னர்ஷிப் மூலம் குவித்த ஜோடியாக மாறியுள்ளனர்.

Rohit and Dhawan

இதன் மூலம் இந்திய அணியின் துவக்க வீரர்களாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோருக்கு அடுத்து ஒருநாள் கிரிக்கெட்டில் 5000 ரன்களை ஜோடியாக குவித்த இந்திய துவக்க வீரர்கள் என்ற சாதனையை இவர்கள் இருவரும் படைத்துள்ளனர்.

- Advertisement -

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்சமாக துவக்க வீரர்களாக களமிறங்கி அதிகபட்ச பார்ட்னர்ஷிப் அமைத்த வீரர்களாக சச்சின் மற்றும் கங்குலி ஆகியோர் திகழ்கின்றனர். இவர்கள் இருவரும் 6609 ரன்களை பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர். அவர்களை தொடர்ந்து கில்கிறிஸ்ட் மற்றும் ஹைடன் ஜோடி அதற்கு அடுத்து நியூசிலாந்து ஜோடி அதற்கடுத்து தற்போது நான்காவது இடத்தில் ரோஹித் மற்றும் தவான் ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : IND vs ENG : தான் அடித்த சிக்ஸரால் காயப்பட்டு துடித்த சிறுமி – போட்டி முடிந்ததும் ரோஹித் செய்த நெஞ்சை தொடும் நிகழ்வு

அதோடு இந்திய அணி சார்பாக அதிக முறை 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடியாக சச்சின் மற்றும் கங்குலி (26 முறை) ஆகியோரை தொடர்ந்து ரோஹித் மற்றும் தவான் ஆகியோர் நேற்றைய போட்டியோடு சேர்த்து 18 முறை 100 ரன்கள் பட்னர்ஷிப் அமைத்து 2ஆவது இடத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement