கண்ணில் வெறி தெரியுது.. விராட் கோலி அந்த ஓய்வை ரத்து செஞ்சுட்டு விளையாட வரனும்.. உத்தப்பா கோரிக்கை

Robin Uthappa
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி 2026 புத்தாண்டில் நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. அந்தத் தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆட்டத்தைப் பார்க்க இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஏனெனில் டெஸ்ட், டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று விட்ட அவர்கள் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்கள்.

அந்த வாய்ப்பில் கடந்த ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க தொடர்களில் சிறப்பாக விளையாடிய அவர்கள் இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார்கள். அத்துடன் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் உலகின் டாப் 2 பேட்ஸ்மேன்களாகவும் முன்னேறி சாதனை படைத்த அவர்கள் தங்களுடைய தரத்தை நிரூபித்துள்ளார்கள். மேலும் 2025/26 விஜய் ஹசாரே கோப்பையில் விளையாடிய அவர்கள் சதமடித்து நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள்.

- Advertisement -

கண்ணில் வெறி இருக்கு:

அதே வேகத்தில் 2027 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கான பயணத்தில் அடுத்ததாக அவர்கள் நியூஸிலாந்து தொடரில் விளையாட உள்ளார்கள். அதற்காக முதல் போட்டி நடைபெறும் வதோதரா மைதானத்தில் விராட் கோலி தீவிரமான பயிற்சிகளை செய்து வருகிறார். அது பற்றிய விவரத்தை விராட் கோலி புகைப்படத்துடன் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அதைப் பார்த்த முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா. “அவரின் கண்கள் உங்களுக்கு ஒரு கதையைச் சொல்கிறது. கண்டிப்பாக இது விராட் கோலி தன்னுடைய டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிவித்த ஓய்வை ரத்து செய்ய வேண்டிய நேரமாகும். மீண்டும் அவர் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதைப் பார்ப்பதை விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார். அதாவது விராட் கோலியிடம் இன்னும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிப்பதற்கான வெறி இருப்பது அவருடைய கண்களில் தெரிவதாக உத்தப்பா கூறியுள்ளார்.

- Advertisement -

உத்தப்பா கோரிக்கை:

அதனால் தம்முடைய ஓய்வை ரத்து செய்து விட்டு அவர் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதைப் பார்க்க விரும்புவதாக உத்தப்பா வெளிப்படையான கோரிக்கை வைத்துள்ளார் என்றே சொல்லலாம். கடந்த நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா தொடர்களில் சுமாராக விளையாடிய விராட் கோலி இங்கிலாந்து தொடரில் கம்பேக் கொடுப்பதற்காக 2024/25 ரஞ்சிக் கோப்பையில் விளையாடி தயாரானார்.

இதையும் படிங்க: சஞ்சு சாம்சன் இடத்துல ஒரு முழு சீசன் முழுசா வைபவ் சூர்யவன்ஷி பொளக்கப்போறான் – அஷ்வின் பகிர்ந்த பதிவு

ஆனால் அதற்கு முன் அவரையும் ரோஹித் சர்மாவையும் கழற்றி விட தேர்வுக்குழு முடிவெடுத்ததாக செய்திகள் வெளியானது. அதை அடுத்த சில தினங்களில் இன்ஸ்டாகிராமில் ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் அடுத்தடுத்து ஓய்வை அறிவித்து உறுதி செய்தனர். அதிலிருந்து அவர்களை தேர்வுக்குழு வலுக்கட்டாயமாக ஓய்வு பெற வைத்தது என்றே சொல்லலாம்.

Advertisement