ஐபிஎல் தொடரில் 12 வது லீக் போட்டி நேற்று முன்தினம் துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கொல்கத்தா அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சுருட்டி வெற்றி பெற்றது.
இந்நிலையில் தற்போது இந்த போட்டியில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முக்கிய வீரரான ராபின் உத்தப்பா பந்தில் எச்சிலை தேய்த்து ஒரு சிக்கலில் சிக்கி உள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் இந்த தொடரில் விதிக்கப்பட்டுள்ளன.
அதில் முக்கிய கட்டுப்பாடாக எச்சிலை பயன்படுத்தக்கூடாது என்ற விதிமுறை என்பது ஏற்கனவே கடந்த பல மாதங்களாக வலியுறுத்தப்பட்டு வருகின்றன. மேலும் எச்சிலுக்கு பதிலாக பதிலாக வியர்வை உபயோகிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த போட்டியில் இந்த கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை மீறி ராபின் உத்தப்பா பந்தில் எச்சிலைத் தடவி உள்ளார். இந்த விதிமுறை மீறல் ஐசிசியின் விதிமுறைகளுக்கு மீறும் சம்பவமாக நிகழ்ந்துள்ளது, எனவே ராபின் உத்தப்பா எதிர்பாராத வகையில் இந்த செயலை செய்து இருந்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதாவது முதன்முறை நடைபெற்றால் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாது. ஆனால் இதுபோன்று மூன்று முறை நிகழும் நடைபெறுமாயின் எதிரணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும். அதையும் மீறி நடைபெறுமாயின் சில போட்டிகளில் சம்மந்தப்பட்ட வீரர்கள் விளையாட தடை செய்யப்பட வாய்ப்புள்ளது என்ற விதிமுறை உள்ளது குறிப்பிடத்தக்கது.