- Advertisement -
இந்திய கிரிக்கெட்

டெஸ்ட் போட்டிகளில் கே.எல் ராகுலின் இடத்திற்கு ஆபத்து இருக்கு.. காரணத்தை கூறிய – ராபின் உத்தப்பா

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இழந்த இந்திய அணியின் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஏனெனில் இந்த தொடரின் முதலாவது போட்டியில் மிக சிறிய இலக்கை துரத்திய இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த வேளையில் இரண்டாவது போட்டியின் போது வெற்றி பெற்று இந்த தொடரை சமன் செய்து பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

கே.எல் ராகுலின் இடத்திற்கு ஆபத்து இருக்கு : ராபின் உத்தப்பா

ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்து இந்த தொடரை தென்னாப்பிரிக்கா அணியிடம் முற்றிலுமாக இழந்தது. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் தேர்வு மற்றும் வீரர்களின் மோசமான செயல்பாடு போன்றவை பெரிய விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தது.

- Advertisement -

அதிலும் குறிப்பாக இந்திய பேட்ஸ்மேன்கள் யாரும் இந்த தொடரில் பெரியளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததால் கடுமையான கருத்துக்களும் பல்வேறு முன்னாள் வீரர்களின் மூலம் முன்வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்திய அணியின் துவக்க வீரரான கே.எல் ராகுல் இந்த தொடரின் 4 இன்னிங்ஸ்களில் விளையாடி 17 ரன்கள் சராசரியுடன் 68 ரன்களை மட்டுமே குவித்துள்ளார்.

எனவே அவர் இனிவரும் டெஸ்ட் தொடர்களில் அவரது இடத்தினை இழக்கும் ஆபத்தை சந்திப்பார் என முன்னாள் இந்திய வீரரான ராபின் உத்தப்பா எச்சரித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : கே.எல் ராகுல் என்னதான் அனுபவ வீரராக இருந்தாலும் அவர் இந்த தென்னாப்பிரிக்க தொடரில் விளையாடிய ஆட்டம் நிர்வாகத்தின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கும்.

- Advertisement -

அதேபோன்று அவர் டெஸ்ட் போட்டிகளில் தற்போது முக்கிய வீரராக இருந்தாலும் இனிவரும் தொடர்களில் கவனம் செலுத்தி ரன்களை குவிக்க வேண்டியது அவசியம். இந்த தென்னாப்பிரிக்க தொடரில் சொதப்பிய அவர் இனிவரும் டெஸ்ட் தொடர்களிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் அவரது இன் கன்சிஸ்டன்சியை கணக்கில் கொண்டு நிர்வாகம் அவரைத் தாண்டி புதிய வீரர்களை அந்த இடத்திற்கு கொண்டுவர முயற்சிக்கும்.

இதையும் படிங்க : 4 ஆவது இடத்தில் விளையாடப்போவது யார்? ரிஷப் பண்ட்டா? திலக் வர்மாவா? – விவரம் இதோ

எனவே கே.எல் ராகுலின் துவக்க வீரருக்கான இடத்திற்கு தற்போது ஆபத்து இருக்கிறது என்று நான் கூறுவேன். அவர் தனது பேட்டிங்கில் நிலையாக ரன் குவிக்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டு சிறப்பாக செயல்பட வேண்டும். எனவே எதிர்வரும் தொடர்கள் அவருக்கு மிக முக்கிய தொடர்களாக மாறும் என ராபின் உத்தப்பா கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -