4 ஆவது இடத்தில் விளையாடப்போவது யார்? ரிஷப் பண்ட்டா? திலக் வர்மாவா? – விவரம் இதோ

Tilak and Pant
- Advertisement -

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது ஆட்டமானது நாளை மறுதினம் நவம்பர் 30-ஆம் தேதி ராஞ்சி நகரில் நடைபெற இருக்கிறது. இந்த முதல் போட்டிக்கான இந்திய அணியின் வீரர்கள் ஏற்கனவே அங்கு சென்று அடைந்து தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஒருநாள் தொடரில் கேப்டன் சுப்மன் கில் மற்றும் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் காயம் காரணமாக இடம்பெறவில்லை.

4 ஆவது இடத்தில் விளையாடப்போவது யார்? :

இதன் காரணமாக அவர்களது இடத்தில் மாற்று வீரராக களமிறங்கப்போவது யார்? என்பது குறித்த கேள்வி பலரது மத்தியிலும் எழுந்துள்ளது. ஏற்கனவே துவக்க வீரராக விளையாடி வந்த சுப்மன் கில் இந்த ஒருநாள் தொடரில் இடம் பெறாததால் அவருக்கு பதிலாக நிச்சயம் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ரோஹித் சர்மாவுடன் துவக்க வீரராக களம் இறங்குவார் என்று தெரிகிறது.

- Advertisement -

அதே வேளையில் நான்காவது இடத்தில் விளையாடப்போவது யார்? என்ற கேள்வியும் அதிகரித்துள்ளது. ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாகவே நான்காம் இடத்தில் களமிறங்கி விளையாடி வந்த ஷ்ரேயாஸ் ஐயர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்ததால் அவர் அசைக்க முடியாத வீரராக ஒருநாள் போட்டிகளில் இருந்து வந்தார்.

இவ்வேளையில் காயம் காரணமாக அவரது இடத்தை தவற விட்டுள்ள நிலையில் இந்த தொடரில் அவரது இடத்தை யார் நிரப்பப்போகிறார்கள்? என்று கேள்வி எழுந்துள்ளது. அந்த வகையில் இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் மிடில் ஆர்டரில் திலக் வர்மா மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரும் பிடித்துள்ளதால் அவர்களில் ஒருவர் நிச்சயம் நான்காவது இடத்தில் விளையாடுவார்கள் என்று தெரிகிறது.

- Advertisement -

அதிலும் குறிப்பாக திலக் வர்மா நான்காம் இடத்தில் விளையாடவே அதிக வாய்ப்புள்ளதாக பேசப்பட்டு வருகிறது. ஏனெனில் சமீபத்தில் இந்திய ஏ அணியின் கேப்டனாக விளையாடிய அவர் முழுநேர பேட்ஸ்மேனாக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : இந்தியா இதோடு முடிஞ்சு போகாது.. அதை மறக்காத அவங்க நம்புனா கம்பேக் கொடுக்கலாம்.. ஏபிடி ஆதரவு

மறுபுறம் ரிஷப் பண்ட் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்பதாலும், அதிரடியாக விளையாடி ஆட்டமிழப்பவர் என்பதனாலும் அவரை அந்த இடத்தில் விளையாட வைக்கக்கூடாது என்றும் நிலையான பேட்ஸ்மேனான திலக் வர்மாவை விளையாட வைக்கலாம் என்றும் தெரிகிறது. ஏற்கனவே இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக கே.எல் ராகுல் இருப்பதினால் ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக திலக் வர்மா நான்காவது இடத்தில் களமிறங்க அதிகமாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement