- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அம்பயர்கள் எடுத்த இந்த முடிவு ரொம்ப தப்பு.. 4 ஆவது போட்டி ரத்து செய்யப்பட்டது குறித்து – ராபின் உத்தப்பா அதிருப்தி

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இந்திய அணியானது இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டியானது டிசம்பர் 17-ஆம் தேதியான நேற்று லக்னோ நகரில் நடைபெற இருந்தது.

அம்பயர்கள் எடுத்த இந்த முடிவு ரொம்ப தப்பு : ராபின் உத்தப்பா

ஆனால் நேற்றைய போட்டி கடுமையான பனிப்பொழிவு காரணமாக ரத்து செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. நேற்றைய போட்டி இந்திய நேரப்படி ஏழு மணிக்கு துவங்க இருந்த வேளையில் பனிப்பொழிவு காரணமாக மூன்று முறை கள ஆய்வு அம்பயர்களால் நடத்தப்பட்டு பிறகு 9 மணியையும் கடந்த பின்னரும் போட்டியை நடத்த சூழல் ஒத்துழைக்காததால் கடுமையான பனிப்பொழிவை காரணம் காட்டி அம்பயர்கள் போட்டியை ரத்து செய்வதாக அறிவித்தார்கள்.

- Advertisement -

அதனால் அடுத்த கடைசி போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெறும் பட்சத்தில் இந்த தொடரை சமன் செய்யவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடுமையான பனிப்பொழிவை காரணம் காட்டி அம்பயர்கள் இந்த போட்டியை ரத்து செய்தது தவறான ஒரு முடிவு என முன்னாள் இந்திய வீரர் ராபின் உத்தப்பா தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர் கூறியதாவது : நடுவர்களின் முடிவால் உண்மையில் நான் குழப்பம் அடைந்துள்ளேன். ஏனெனில் இந்த நிலைமை சரியாகப் போவதில்லை. ஆனால் இந்த சூழ்நிலையில் நிச்சயம் போட்டியினை நடத்தியிருக்கலாம். இதைவிட மோசமான சூழ்நிலைகளில் நான் முதல்தர போட்டியில் விளையாடியிருக்கிறேன்.

- Advertisement -

அந்த சூழ்நிலை எல்லாம் ஒப்பிடும் போது இந்த சூழ்நிலை மிகவும் சிறந்ததாக இருந்தது. எனவே போட்டியை நடத்தியிருக்க வேண்டும் என உத்தப்பா அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். அதேநேரம் இந்த போட்டியை நேரில் காண வந்த ரசிகர்கள் நீண்ட நேரமாக போட்டி நடைபெறும் என்று மைதானத்தில் காத்திருந்து பின்னர் கடைசியில் ஏமாற்றத்துடன் வெளியேறியிருந்தனர்.

இதையும் படிங்க : 4ஆவது போட்டி ரத்தானதால் இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ள கூடுதல் சாதகம் – விவரம் இதோ

அதோடு போட்டியை நடத்த சூழல் இல்லை என்பது முன்கூட்டியே தெரிந்திருக்க வேண்டும் என்றும் வடமாநிலங்களில் இந்த நேரத்தில் பனி இருக்கும் என்பதனால் போட்டி அட்டவணையை அங்கு அமைத்தது தவறு என்றும் ரசிகர்கள் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -