கஷ்டமா இருந்தாலும் அவங்க 2 பேரையும் நீக்கியது சரிதான்.. இந்திய அணி செம ஸ்ட்ராங் – ராபின் உத்தப்பா கருத்து

Robin Uthappa
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2026 டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பி.சி.சி.ஐ கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது. அந்த அணியில் சூரியகுமார் யாதவ் தலைமையில் 15 வீரர்களுக்கு இடம் கிடைத்தது. அப்படி இந்திய அணியின் பட்டியல் வெளியானதில் இருந்து பலரும் அதைப்பற்றியே பேசி வருகின்றனர்.

அந்த 2 பேரையும் நீக்கியது சரிதான் : ராபின் உத்தப்பா

அப்படி சூரியகுமார் யாதவ் தலைமையில் வெளியான அந்த இந்திய அணியில் துணை கேப்டனான சுப்மன் கில் அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான அக்சர் பட்டேல் புதிய துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அதோடு விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இஷான் கிஷனுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

- Advertisement -

இப்படி கடந்த ஓராண்டாகவே ஜிதேஷ் சர்மா விக்கெட் கீப்பராகவும், சுப்மன் கில் துவக்க வீரராகவும் விளையாடி வந்த வேளையில் அவர்கள் இருவரையும் நீக்கிவிட்டு இந்திய அணி சில மாற்றங்களை செய்தது பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்திருந்தது. அதோடு இந்த நீக்கம் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா டி20 உலக கோப்பை அணியில் இருந்து சுப்மன் கில் மற்றும் ஜிதேஷ் சர்மா ஆகியோர் நீக்கப்பட்டது இந்திய அணிக்கு பலம் தான் என்று கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணித்தேர்வு மிக சிறப்பாக இருக்கிறது என்று நான் கூறுவேன்.

- Advertisement -

ஏனெனில் இந்திய அணியின் பலத்தை தான் தற்போது நாம் முதன்மையாக பார்க்க வேண்டும். அந்த வகையில் பேட்டிங் ஃபார்மின்றி தவித்து வரும் சுப்மன் கில் நீக்கப்பட்டது சரிதான். அதேபோன்று ஜிதேஷ் சர்மா சிறப்பாக விளையாடி வேளையில் காம்பினேஷன் காரணமாக அவரை நீக்கியது சரிதான் என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க : சூர்யவன்சி 190 ரன்ஸ் அடிச்சு பயனுமில்லை.. இது இல்லாம ஏபிடி உலக சாதனையை உடைச்சா போதுமா? அஸ்வின்

ஏனெனில் இந்த நீக்கங்கள் நமது மனதை உடைத்து இருந்தாலும் இந்திய அணியின் பலம் என்னவோ அணியின் காம்பினேஷன் எவ்வாறு இருந்தால் நமது அணி கோப்பையை வெல்லுமோ அதனை கருத்தில் கொண்டே இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எனவே இந்த மாற்றங்கள் அனைத்தும் சரியான ஒன்றுதான் என ராபின் உத்தப்பா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement