சூர்யவன்சி 190 ரன்ஸ் அடிச்சு பயனுமில்லை.. இது இல்லாம ஏபிடி உலக சாதனையை உடைச்சா போதுமா? அஸ்வின்

R Ashwin
- Advertisement -

இந்தியாவில் விஜய் ஹசாரே கோப்பை 2025 உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் டிசம்பர் 24ஆம் தேதி துவங்கியது. அந்தத் தொடரில் பிளேட் பிரிவில் இடம் வகிக்கும் பீகார் மற்றும் அருணாச்சலப்பிரதேச அணிகள் மோதிய போட்டி ஒருதலைப்பட்சமாக முடிந்தது. நேற்று ராஞ்சியில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய பீகார் அணி புள்ளப்பூச்சியாக கருதப்படும் அருணாச்சலப்பிரதேசத்தை அடித்து நொறுக்கி 50 ஓவரில் 574/6 ரன்கள் குவித்தது.

அதன் வாயிலாக லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த அணியாக பீகார் உலக சாதனை படைத்தது. இதற்கு முன் இதே அருணாச்சலப் பிரதேசத்துக்கு எதிராக தமிழ்நாடு 502 ரன்கள் அடித்ததையும் முந்தைய சாதனை. அந்த சாதனையை பீகார் உடைப்பதற்கு வைபவ் சூரியவன்சி அதிகபட்சமாக 190 (84) ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

தரம் இல்லையே:

குறிப்பாக 59 பந்துகளில் 150 ரன்கள் அடித்த அவர் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் வேகமாக 150+ ரன்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையையும் படைத்தார். இதற்கு முன் 2015ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் 64 பந்துகளில் 150+ ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. அவருடைய அதிரடியான ஆட்டத்தால் அருணாச்சலப் பிரதேசத்தை 397 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து பீகார் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.

இந்நிலையில் தரத்தில் குறைந்த அருணாச்சலப் பிரதேசத்துக்கு எதிராக சூரியவன்சி படைத்த சாதனையில் பயனில்லை என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். இது பற்றி அஸ்வின் பேசியது பின்வருமாறு. “வைபவ் சூரியவன்சிக்கு பெரிய பாராட்டுக்கள். ஆனால் ஒரு கேள்வியை நான் கேட்க விரும்புகிறேன். சில அணிகளிடம் தரத்தில் சுண்ணாம்பு மற்றும் பாலாடைக்கட்டிகள் போல மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது”

- Advertisement -

அஸ்வின் அதிருப்தி:

“சில அணிகள் தரத்தில் தலைகீழாக இருப்பதால் அங்கே சிறப்பான போட்டியில்லை. அதே சமயம் வைபவுக்கு பாராட்டுக்கள். நீங்கள் உங்களுடைய உறவினருக்கு எதிராக பெரிய ஸ்கோர் அடித்தாலும் அது மிகப்பெரிய ஸ்கோராக மட்டுமே குறிக்கப்படும். நீங்கள் எங்கே இரட்டை சதமடித்தாலும் அது இரட்டை சதமாகவே கருதப்படும். ஆனால் அருணாச்சலப்பிரதேசம் போன்ற அணிகள் நல்ல அணிகளாக வளர்வதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்”

இதையும் படிங்க: கில் இல்லை.. ருதுராஜ், ஜெய்ஸ்வால் உட்பட 2026 டி20 உ.கோ மாற்று இந்திய அணியை தேர்ந்தெடுத்த ஆகாஷ் சோப்ரா

“இப்படிப்பட்ட போட்டிகள் அவர்களுடைய தன்னம்பிக்கையை என்ன செய்யும்?” என்று கூறினார். இது மட்டுமின்றி 2025 அண்டர்-19 ஆசியக் கோப்பையில் அமீரகத்துக்கு எதிராக சூரியவன்சி பெரிய ஸ்கோர் அடித்தார். ஆனால் முக்கியமான இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் சொதப்பியது இந்தியாவின் தோல்விக்கு காரணமானது. அதனால் பலவீனமான அணிகளை அடித்து நொறுக்குவதில் என்ன பயன்? என்று சூர்யவன்சி மீது ஒரு தரப்பு ரசிகர்கள் அழுத்துக்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement