ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி இந்தியாவில் துவங்குகிறது. அத்தொடரில் விளையாடுவதற்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் கடைசி நேரத்தில் துணைக் கேப்டன் சுப்மன் கில் கழற்றி விடப்பட்டார். கடைசி 18 சர்வதேச டி20 போட்டிகளில் அரை சதம் கூட அடிக்காத அவர் மோசமான ஃபார்மில் இருக்கிறார்.
அதே போல ஜிதேஷ் சர்மாவையும் கடைசி நேரத்தில் கழற்றி விட்ட தேர்வுக்குழு பேக்-அப் கீப்பராக இஷான் கிஷானை தேர்ந்தெடுத்துள்ளது. அது மட்டுமின்றி லோயர் ஆர்டரில் ஃபினிஷிங் செய்வதற்காக ரிங்கு சிங் தேர்வு செய்யப்பட்டதும் பலரை மகிழ்ச்சியடைய வைத்தது. அந்த வகையில் கடைசி நேரத்தில் அதிரடியான மாற்றங்களுடன் தேர்வு செய்யப்பட்ட உலகக்கோப்பை இந்திய அணியை பலரும் வரவேற்கிறார்கள்.
மாற்று இந்திய அணி:
அதே சமயம் அந்த அணியில் சில வீரர்கள் தகுதியிருந்தும் பல்வேறு காரணங்களுக்காக தேர்வு செய்யப்படவில்லை. இந்நிலையில் அப்படிப்பட்ட வீரர்களை வைத்து 2026 டி20 உலகக் கோப்பைக்கான தன்னுடைய மாற்று இந்திய அணியை முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தேர்ந்தெடுத்துள்ளார். அந்த அணிக்கு 2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப்பை இறுதிப்போட்டி வரை அழைத்து சென்ற ஸ்ரேயாஸ் ஐயரை அவர் கேப்டனாகவும் தேர்ந்தெடுத்துள்ளார்.
ஆனால் அந்த அணியில் துணைக் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டிருந்த சுப்மன் கில்லை அவர் தேர்ந்தெடுக்கவில்லை. அதற்கான காரணம் பற்றி ஆகாஷ் சோப்ரா பேசியது பின்வருமாறு. “சுப்மன் கில்லை தேர்ந்தெடுக்காதது ஏன் என்று நீங்கள் என்னிடம் கேட்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அணியிலேயே நங்கூரமாக விளையாட வேண்டிய ஒரு வீரரை தேர்ந்தெடுக்காத போது, நான் மட்டும் ஏன் கில்லை தேர்ந்தெடுக்க வேண்டும்?”
வித்தியாசமான அணி:
“அவருக்கு நாம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் போதுமான இடத்தைக் கொடுத்துள்ளோம். இருப்பினும் தற்போது உருவாக்கப்பட்டுள்ள கதையைப் பொறுத்து அவரை நாம் டி20 அணியில் தேர்ந்தெடுக்கவில்லை. உண்மையில் அவரை நாம் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். ஆனால் அதை செய்யவில்லை. ஏனெனில் அதைச் செய்தால் நான் கில்லுக்கு விளம்பரம் செய்வதாக மக்கள் சொல்வார்கள். எனவே அதை நான் செய்யவில்லை” என்று கூறினார்.
இதையும் படிங்க: 2027 உ.கோ தொடரில் விராட் கோலி விளையாடுவாரா? ராஜ்குமார் சர்மா அளித்த பதில் – விவரம் இதோ
ஐசிசி டி20 உலகக் கோப்பை ஆகாஷ் சோப்ரா மாற்று இந்திய அணி: யசஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரிஷப் பண்ட், ஜிதேஷ் சர்மா, க்ருனால் பாண்டியா, நிதிஷ் ரெட்டி, தீபக் சஹர், யுஸ்வேந்திர சஹால், முகமது சிராஜ். புவனேஷ்வர் குமார்.
ரிசர்வ்: முகமது ஷமி, கேஎல் ராகுல், விப்ராஜ் நிகாம், ஷஷாங் சிங்



