இந்த ஓவர் முடியும் வரை தோனி கண் இமையை கூட அசைக்காமல் உற்றுநோக்கி இருந்தார் – ராபின் உத்தப்பா பகிர்ந்த தகவல்

Uthappa
- Advertisement -

ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி 2007 ஆம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை தொடரில் பங்களாதேஷ் அணியுடன் லீக் போட்டியில் தோல்வியடைந்து வெளியேறியது. அதன் பின்னர் உடனடியாக தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 2007 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்றது. இதனால் இந்திய அணியின் மீது விமர்சனத்துக்கு மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்தது.

Uthappa

- Advertisement -

அந்த தொடரில் சீனியர் வீரர்களான சச்சின், கங்குலி, டிராவிட் போன்றோர் தானாக முன்வந்து விளகினார்கள். இதன் காரணமாக இந்திய அணி இளம் வீரரான தோனியின் கையில் இந்திய அணி ஒப்படைக்கப்பட்டது. அந்நேரத்தில் தனக்கு கிடைத்த அந்த இளம் வீரர்களைக் கொண்டு தோனி தலைமையிலான இந்திய அணி அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் அந்த கோப்பையை வென்று அசத்தியது.

இந்நிலையில் அந்த தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் இரு அணிகளும் சமமான ரன்களை அடித்ததால் வெற்றியை தீர்மானிக்க பவுல் அவுட் முறை முடிவு செய்யப்பட்டது. இந்த முறையில் ஒவ்வொரு அணிக்கும் 5 வாய்ப்புகள் தரப்படும் அதில் எந்த அணியின் வீரர்கள் அதிகமுறை ஸ்டம்பை அடிக்கிறார்களோ அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

uthappa

அந்நேரத்தில் தோனி வித்தியாசமாக பவுலர்களை பயன்படுத்தாமல் உத்தப்பா, சேவாக் போன்ற பேட்ஸ்மேன்களை பந்துவீச வைத்தார். இந்நிலையில் அந்த நிகழ்வு குறித்து தற்போது பேட்டியளித்த உத்தப்பா கூறுகையில் : தோனிக்கு மிகப்பெரிய தைரியம் இருந்தது நீங்கள் அந்த போட்டியை பார்த்தால் உங்களுக்கு அது தெரிந்து இருக்கும். இளம் வயதில் ஒரு மிகப்பெரிய தொடருக்கு கேப்டனாக இருப்பது சாதாரண விஷயம் இல்லை.

Uthappa 1

பவுல் அவுட் நேரத்தில் என்னை பந்துவீச அழைத்தார். நானும் தோனி கேட்டதற்கு இணங்க பந்துவீச முன்வந்து ஸ்டம்பை வீழ்த்தினேன். அதேபோன்று 3 பேரும் சிறப்பாக பந்துவீசி ஸ்டம்பை வீழ்த்தினோம். குறிப்பாக அந்நேரத்தில் தோனி பவுல்அவுட் முடியும் வரை தன் கண் இமை கூட அசைக்காமல் ஸ்டம்பை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார் என்று ராபின் உத்தப்பா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement