- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இப்படியே ஓவர் ரேட்டட்ன்னு சொல்லிக்கிட்டு மாத்துன.. 2026 டி20 உ.கோ தோல்வி உறுதி.. கம்பீரை விளாசிய உத்தப்பா

இந்திய கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வென்ற போதிலும் 2வது போட்டியில் தோற்றது. அந்தப் போட்டியிலும் கௌதம் கம்பீர் செய்த மாற்றங்கள் இந்தியாவின் தோல்விக்கு ஒரு காரணமானது. குறிப்பாக லோயர் ஆர்டரில் விளையாடக்கூடிய அக்சர் பட்டேலை அவர் 3வது இடத்தில் விளையாட வைத்தார். அந்த வாய்ப்பில் அக்சர் 21 (21) ரன்கள் மட்டுமே எடுத்தார்.

அதே போல 3வது இடத்தில் விளையாடக்கூடிய சூரியகுமார் 4வது இடத்தில் விளையாடி 5 (4) ரன்னில் நடையைக் கட்டினார். முன்னதாக இப்படியெல்லாம் ஏன் மாற்றத்தை செய்கிறீர்கள்? என்று கேட்டதற்கு “வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் பேட்டிங் வரிசை என்பது ஓவர்ரேட்டட்” என கௌதம் கம்பீர் பதிலளித்தார். மேலும் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களை தவிர்த்து மற்றவர்கள் அனைவரும் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் மாற்றி மாற்றி களமிறங்க வேண்டுமென்றும் அவர் கூறினார்.

- Advertisement -

கம்பீரின் அணுகுமுறை:

இந்நிலையில் கௌதம் கம்பீரின் இந்த அணுகுமுறை 2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு தோல்வியைக் கொடுக்கலாம் என்று முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா விமர்சித்துள்ளார். அதற்கான காரணம் பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் மட்டுமே நிலையானவர்கள், மற்றவர்கள் சூழ்நிலைக்குத் தகுந்தார் போல் மாறக்கூடியவர்கள் என்று கௌதம் கம்பீர் செய்தியாளர்கள் சந்திப்பில் சொன்னார்.

“மரியாதையுடன் சொல்ல வேண்டுமெனில் அவரது கருத்துடன் நான் உடன்படவில்லை. நீங்கள் 214 போன்ற பெரிய இலக்கைத் துரத்தும் போது உங்களுடைய திடமான பேட்ஸ்மேன்கள் களமிறங்க வேண்டும். ஒருவேளை இன்று அக்சர் பட்டேல் கண்ணை மூடிக்கொண்டு அடிக்கக்கூடிய பேட்ஸ்மேனாக களமிறங்கி இருந்தால் கூட 21 (21) ரன்கள் எடுத்திருக்க மாட்டார். ஒன்று அவர் அதிரடி காட்டியிருப்பார் அல்லது அவுட்டாகியிருப்பார்”

- Advertisement -

உத்தப்பா விளாசல்:

“ஆனால் இந்த திட்டம் என்னை சமாதானப்படுத்தவில்லை. உங்களுடைய டாப் ஆர்டரை இழக்கும் போது நீங்கள் நிலைமையை சீர்படுத்த வேண்டும். அதற்கு உங்களது டாப் 3 பேட்ஸ்மேன்கள் நிலையாக இருக்க வேண்டும். ஏனெனில் அது ஸ்பெஷலிஸ்ட் வேலையாகும். சூழ்நிலைக்கு தேவையான மாற்றங்களை 6 ஓவருக்குப் பின்பே செய்ய வேண்டும்”

இதையும் படிங்க: ஒரு வார்த்தை கூட பேசாம.. தோனி என்னை திட்டமிட்டு அவுட்டாக்கியதை பாத்து அதிர்ந்தேன்.. அபிஷேக் பேட்டி

“நீங்கள் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழக்கும் போது அடித்தளத்தை அமைக்க வேண்டும். ஆனால் அங்கு உங்களுடைய வீரர்கள் தங்களுடைய வேலை என்னவென்று தெளிவாக தெரியாமல் விளையாடும் போது அடித்தளத்தை அமைக்க முடியாது. நம்முடைய அணியில் சோதனை என்ற பெயரில் நீண்டகாலமாக தொடர்ச்சியான மாற்றங்கள் நடைபெறுகிறது. அந்த மாற்றங்கள் பெரிய தொடரில் இந்தியாவுக்கு வலியைக் கொடுக்குமோ என்று நான் கவலைப்படுகிறேன். குறிப்பாக அது உலகக் கோப்பையில் வேதனை தரக்கூடாது என்றே நீங்கள் விரும்புவீர்கள்” எனக் கூறினார்.

- Advertisement -