ஒரு வார்த்தை கூட பேசாம.. தோனி என்னை திட்டமிட்டு அவுட்டாக்கியதை பாத்து வியந்தேன்.. அபிஷேக்

Abhishek Sharma
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எம்.எஸ். தோனி மிகச் சிறந்த கேப்டன்களில் ஒருவராக போற்றப்படுகிறார். பல போட்டிகளில் எதிரணி பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்கும் போது அவர் வெற்றிகரமான திட்டங்களை அமைத்து அவுட்டாக்கியுள்ளார். எடுத்துக்காட்டாக 2010 ஐபிஎல் இறுதிப் போட்டியில் நேராக ஃபீல்டரை வைத்து பொல்லார்ட்டை அவுட்டாக்கிய அவர் சிஎஸ்கே முதல் கோப்பையை உதவியை மறக்க முடியாது.

அதே போல கடந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடும் போது தோனி தம்மை ஒரு வார்த்தைக் கூட பேசாமல் அவுட்டாக்கியது பற்றி அபிஷேக் ஷர்மா வியப்பாக பேசியுள்ளார். ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடிய அபிஷேக் இந்தியாவுக்காக அறிமுகமாகி நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதனால் ஐசிசி டி20 தரவரிசையில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறியுள்ள அபிஷேக் புதிய மேட்ச் வின்னராக உருவெடுத்துள்ளார்.

- Advertisement -

தோனியின் தாக்கம்:

அந்த வகையில் மிகவும் தரமான பேட்ஸ்மேனாக அறியப்படும் அபிஷேக் ஷர்மாவிடம் கடந்த ஐபிஎல் 2025 சீசனில் ஜடேஜாவை வைத்து தோனி மனதளவில் விளையாடியுள்ளார். அதுவே தம்முடைய தன்னம்பிக்கையை சீர்குலைத்து அவுட்டாக்க வைத்ததாக அபிஷேக் தெரிவித்துள்ளார். அது பற்றி சமீபத்திய யூடியூப் சேனலில் அபிஷேக் ஷர்மா வியப்புடன் பேசியது பின்வருமாறு.

“ஒரு ஐபிஎல் போட்டியில் நான் பேட்டிங் செய்யச் சென்ற போது மஹி பாய் விக்கெட் கீப்பராக இருந்தார். ஜடேஜா பாய் பந்து வீசத் தயாராக இருந்தார். அப்போது இடது கை ஸ்பின்னரான ஜடேஜாவை எடுத்த எடுப்பில் அட்டாக் செய்ய வேண்டும் என்ற தெளிவான திட்டத்துடன் இருந்தேன். அது முதல் அல்லது 2வது பந்தாக இருந்தாலும் சரி அவரை அடிக்க நினைத்தேன். ஆனால் தோனி பாய் வித்தியாசமாக கட்டமைக்கப்பட்டவர்”

- Advertisement -

அதிர்ந்த அபிஷேக்:

“அவர் ஸ்டம்ப்புகளுக்கு பின்னால் நின்று கொண்டே ஜடேஜாவிடம் ஏதோ சைகையால் கிசுகிசுத்து ஒரு ஃபீல்டரை சில அடிகள் பின்னே நகர்த்தினார். அதுவே என்னை அதிர வைப்பதற்கு போதுமானதாக இருந்தது. அந்த தருணத்தில் தோனி பாய் எனக்காக ஏதோ ஒரு திட்டத்தை வகுத்து விட்டார் என்று நான் கருதினேன். அதனால் களமிறங்கிய போது என்னிடம் இருந்த தன்னம்பிக்கை திடீரென மறைந்தது”

இதையும் படிங்க: சாம்சன் என்ன தப்பு பண்ணாரு? கில்லை கழற்றி விட்டு அவரை ஓப்பனிங்கில் ஆடவைங்க.. உத்தப்பா விளாசல்

“அதன் காரணமாக கவனத்துடன் விளையாடிய நான் அட்டாக் செய்யும் ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. என்னுடன் தயக்கம் ஒட்டிக்கொண்டதால் அடுத்த ஓவரிலேயே ஒரு வேகப்பந்து வீச்சாளரிடம் அவுட்டானேன். அந்த மொத்த நிகழ்வு இன்றும் எனக்குத் தெளிவாக நினைவிருக்கிறது. அது தோனி பாய் ஒரு வார்த்தைக் கூட சொல்லாமல் மனதளவில் ஏற்படுத்திய தாக்கமாகும்” என்று கூறினார்.

Advertisement