சென்னை அணிக்கு ஒரு கேதார் ஜாதவ்னா.. ராஜஸ்தான் அணிக்கு இவர்தான் போல – கிண்டல் செய்யம் ரசிகர்கள்

rr
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 15 ஆவது லீக் போட்டி தற்போது அபுதாபி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ஸ்மித் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

rcbvsrr

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக அறிமுக வீரர் லாம்ரோர் 47 ரன்களையும், ராகுல் திவாதியா 24 ரன்களும் குவித்தனர். அதன் பின்னர் தற்போது 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி 19.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களை அடித்து வெற்றிபெற்றது. பெங்களுரு அணி சார்பாக படிக்கல் மற்றும் கோலி ஆகியோர் அரைசதம் அடித்தனர்.

இந்த ஐபிஎல் தொடரை பொறுத்தவரை சஞ்சு சாம்சன், ப்ரித்வி ஷா, படிக்கல், நடராஜன், திவாதியா, வாஷிங்டன் சுந்தர் என இளம் வீரர்கள் ஒரு பக்கம் அசத்தி வர, முன்னணி வீரர்கள் மற்றும் பல ஆண்டு கிரிக்கெட் விளையாடிய சீனியர் வீரர்கள் தொடர்ச்சியாக சொதப்பி வருகின்றனர். அந்த வகையில் சென்னை அணியை சேர்ந்த கேதர் ஜாதவ் தொடர்ச்சியான சொதப்பலான ஆட்டத்தை ரசிகர்கள் மத்தியில் அதிகம் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

uthappa 1

அதே போன்று தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் ராபின் உத்தப்பா தனது மோசமான ஆட்டத்தால் விமர்சனங்களை பெற்று வருகிறார். இந்திய அணியில் ஒரு அதிரடி ஆட்டக்காரராககும் ஐபிஎல் வரலாற்றில் மிகச்சிறந்த ஹிட்டராக கருதப்பட்ட அவர் இந்த தொடரில் நான்கு போட்டிகளிலும் சேர்த்து 33 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

அதிலும் இன்றைய போட்டியில் அடித்த 17 ரன்கள் தான் அதிகம். எனவே அவரிடம் இருந்து இப்படி ஒரு சொதப்பலான ஆட்டத்தை எதிர்பார்க்காத ரசிகர்கள் அவரை அவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க வேண்டுமா ? அவரும் ஒரு ஜாதவ் போன்று தான் என்று சரமாரியாக சமூகவலைதளத்தில் விமர்சனங்களை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement