- Advertisement -
இந்திய கிரிக்கெட்

8 பேட்ஸ்மேன், 5 பவுலர்.. சாம்சன், கில் உட்பட 3வது டி20க்கான தனது தரமான இந்திய பிளேயிங் லெவன் பற்றி உத்தப்பா

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. 2 போட்டிகளின் முடிவில் சமநிலையில் இருக்கும் அத்தொடரின் 3வது போட்டி டிசம்பர் 14ஆம் தேதி தரம்சாலாவில் நடைபெற உள்ளது. அந்தப் போட்டியில் வெற்றி பெற்று முன்னிலையில் பெற இரு அணிகளும் தயாராகியுள்ளன.

முன்னதாக அப்போட்டியில் சுப்மன் கில் நீக்கப்பட்டு சஞ்சு சாம்சன் ஓப்பனிங்கில் விளையாட வேண்டும் என்பதே பலருடைய கோரிக்கையாக இருக்கிறது. இந்நிலையில் தம்மைப் பொறுத்த வரை துணை கேப்டனான சுப்மன் கில் ஓப்பனிங்கில் தொடரலாம் என்று முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். அதே சமயம் ஜித்தேஷ் சர்மாவை கழற்றி விட்டு விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் 3வது இடத்தில் விளையாட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

- Advertisement -

சாம்சன், கில் அடங்கிய லெவன்:

அதே சமயம் சூரியகுமார் யாதவ் நிலையாக 4வது இடத்தில் விளையாட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இது பற்றி 3வது டி20 போட்டிக்கான தம்முடைய தரமான இந்தியப் பிளேயிங் லெவனை தேர்ந்தெடுத்த உத்தப்பா பேசியது பின்வருமாறு. “அபிஷேக் – சுப்மன் ஓப்பனிங்கில் விளையாடுவதை நான் பார்க்க விரும்புகிறேன். சஞ்சு சாம்சன் 3வது இடத்தில் விளையாட வேண்டும்”

“4, 5வது இடங்களில் சூரியகுமார், திலக் வர்மா விளையாட வேண்டும். அதையும் தாண்டி உங்களுக்கு ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அப்சர் பட்டேல் ஆகியோர் விளையாடுவார்கள். எனவே உங்களுக்கு 8 பேட்ஸ்மேன்கள் 5 பவுலர்கள் இருப்பார்கள். இப்படிப்பட்ட பிளேயிங் லெவன் இருப்பதை நான் பார்க்க விரும்புகிறேன். இது இந்திய அணிக்கு சிறந்த லெவனாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்”

- Advertisement -

உத்தப்பா லெவன்:

“சூரியகுமாரை பொறுத்த வரை அவர் நிலையாக ஒரு இடத்தில் விளையாட வேண்டும். 4வது இடத்தில் அவர் ஐபிஎல் தொடரில் நிறைய ரன்கள் அடித்துள்ளார். எனவே அவர் 4வது இடத்தில் விளையாடுவது நல்லது. சுப்மன் கில் தம்முடைய சொந்த ஸ்டைலில் விளையாட வேண்டும். ரன்கள் அடிப்பதற்கான வழியும் அவரிடம் இருக்கிறது. எனவே அவர் சில ஓவர்கள் நிலைத்து விளையாட வேண்டும். ஒருமுறை அவர் செட்டிலாகிவிட்டால் அவுட்டாக்குவது கடினம்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: 50 பந்தில் 101 ரன்ஸ்.. பட்டைய கிளப்பிய ஜெய்ஸ்வால்.. கில்லுக்கு பதிலாக விளையாட கம்பீருக்கு சிக்னல்

உத்தப்பா தேர்ந்தெடுத்த 3 டி20 போட்டிக்கான இந்திய அணி: அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சஞ்சு சாம்சன் (கீப்பர்), சூரியகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹர்டிக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் பட்டேல், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்ப்ரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங்

- Advertisement -