- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான தனது பிளேயிங் லெவனை வெளியிட்ட உத்தப்பா – லிஸ்ட் இதோ

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் ஜூன் 20-ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் துவங்கி நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இங்கிலாந்து சென்றடைந்துள்ள வேளையில் தற்போது தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இளம் வீரர்களை கொண்ட இந்திய அணிக்கு இந்த தொடர் மிகவும் சவால் வாய்ந்த தொடராக மாறியுள்ளது.

இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வுசெய்த ராபின் உத்தப்பா :

ஏற்கனவே இந்த தொடருக்கு முன்னதாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற ஜாம்பவான் வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால் இந்த தொடரானது அனைவரின் மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு இந்திய அணியில் இடம் பிடிக்கப்போகும் வீரர்கள் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான முதல் போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணியின் சிறந்த பிளேயிங் லெவனை இந்திய அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா தேர்வுசெய்து அறிவித்துள்ளார். அந்தவகையில் அவர் தேர்வு செய்துள்ள இந்திய அணியின் வீரர்களின் பட்டியலில் :

கே.எல் ராகுல் மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் துவக்க வீரர்களாக இடம் பிடித்துள்ளனர். அதேபோன்று மூன்றாவது இடத்தில் தமிழக வீரரான சாய் சுதர்சனை தேர்வு செய்துள்ளார். நான்காவது இடத்தில் கேப்டன் சுப்மன் கில்லை தேர்வு செய்துள்ளார். 5 மற்றும் 6-வது இடத்தில் கருண் நாயர் மற்றும் ரிஷப் பண்டை தேர்வு செய்துள்ளார்.

- Advertisement -

அதோடு ஏழாவது இடத்தில் ஆல்ரவுண்டராக நிதீஷ் ரெட்டியையும், எட்டாவது இடத்தில் ரவீந்திர ஜடேஜாவையும் தேர்வு செய்துள்ளார். அவர்களை தாண்டி மீதமுள்ள மூன்று இடங்களுக்கு வேகப்பந்து வீச்சாளர்களான ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.

இதையும் படிங்க : நிதீஷ் ரெட்டியால் நிச்சயமாக இதை செய்ய முடியும்.. அவர் ஒரு பக்கா ஆல்ரவுண்டர் – மோர்னே மோர்கல் கருத்து

அந்த வகையில் ராபின் உத்தப்பா தேர்வுசெய்த இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் இதோ : 1) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 2) கே.எல் ராகுல், 3) சாய் சுதர்சன், 4) சுப்மன் கில், 5) கருண் நாயர், 6) ரிஷப் பண்ட், 7) நிதீஷ் ரெட்டி, 8) ரவீந்திர ஜடேஜா, 9) ஜஸ்ப்ரீத் பும்ரா, 10) முகமது சிராஜ், 11) பிரசித் கிருஷ்ணா.

- Advertisement -