15 வருஷத்துக்கு முன்னாடி கோலி பேசுனதை கேட்டு நொந்து போய்ட்டேன்.. இப்போ வியப்பா இருக்கு.. உத்தப்பா பேட்டி

Robin Uthappa
- Advertisement -

டெல்லியை சேர்ந்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி 35 வயதிலேயே இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்து ஜாம்பவானுக்கு நிகராக செயல்பட்டு வருகிறார். கடந்த 2008 அண்டர்-19 உலகக் கோப்பையை வென்ற அவர் குறுகிய காலத்திலேயே சீனியர் அணியில் நிலையான இடத்தைப் பிடித்தார். அங்கிருந்து 2013க்குப்பின் சச்சின் டெண்டுல்கரின் இடத்தை நிரப்பும் அளவுக்கு அசத்தி வரும் அவர் 26,000+ ரன்களையும் 80 சதங்களையும் அடித்துள்ளார்.

பொதுவாக டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வெவ்வேறு விதமான கிரிக்கெட்டில் ஒரே நேரத்தில் சேர்ந்தால் போல் அசத்துவது மிகவும் கடினமானதாகும். ஆனால் அந்த 3 வகையான கிரிக்கெட்டிலும் கிட்டத்தட்ட 50 என்ற பேட்டிங் சராசரியில் ரன்களை குவித்துள்ளதே அவருடைய சிறப்பம்சமாகும். அத்துடன் ஆரம்பக் காலங்களில் விராட் கோலி கொஞ்சம் பருமனாக இருந்தார்.

- Advertisement -

வியக்கும் உத்தப்பா:
ஆனால் நாளடைவில் மிகவும் கடினமாக உழைத்து தன்னுடைய உடலை மெருகேற்றிய அவர் தற்போது உலக கிரிக்கெட்டில் ஃபிட்னஸ் எனும் வார்த்தைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார். இந்நிலையில் 15 வருடத்திற்கு முன் பார்த்த போது தம்மால் பெரியளவில் வர முடியும் என்று விராட் கோலி சொன்னதாக ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். குறிப்பாக “என்ன இந்தப் பையன் இப்படியெல்லாம் பேசுகிறார்” என்று நொந்துப் போகும் அளவுக்கு விராட் கோலி தம்மிடம் பேசியதாக உத்தப்பா கூறியுள்ளார்.

ஆனால் தற்போது விராட் கோலி சொன்னதை செய்துள்ளதாகவும் ராபின் உத்தப்பா வியப்பை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி ஒரு துணிச்சலான இளம் டெல்லி பையனிலிருந்து மனிதராக பரிணமிப்பதை நான் உண்மையில் பார்த்திருக்கிறேன். உண்மையில் அவருடைய பரிணாம வளர்ச்சி பிரம்மாண்டமாக உள்ளது”

- Advertisement -

“கடந்த 15 வருடங்களுக்கு முன்பு விதைத்ததை அவர் இன்று நடைமுறையில் அறுவடை செய்கிறார். 19 வயதில் தன்னை பற்றி மிகுந்த நம்பிக்கையுடன் விராட் கோலி பேசியதை கேட்டால் “என்ன இந்தப் பையன் இப்படி பேசுகிறான்” என்று நீங்கள் நொந்து போவீர்கள். ஆனால் அப்படியே 10 வருடங்கள் முன்னோக்கிச் சென்று பார்க்கும் போது அவருடைய பேச்சு அர்த்தமுள்ளதாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது”

இதையும் படிங்க: இந்திய அணியின் எதிர்காலம் முக்கியம்.. அஸ்வின், ஷமியிடம் அவர் இதைப்பற்றி பேசணும்.. பராஸ் மாம்ப்ரே பேட்டி

“தன்னுடைய பேச்சுக்கு பின்புறத்தில் விஷயம் இருக்கிறது என்பதை விராட் கோலி எப்போதும் காட்டுவார். கடந்த வருடம் ஆர்சிபி வீரர்களுடன் நான் ஒரு பேட்டி எடுத்தேன். ஆனால் அந்தப் பேட்டி முடிந்ததும் விராட் கோலி மட்டும் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று ஒரு மணி நேரமாக பயிற்சிகளை எடுத்த பின்பே சென்றார்” என்று கூறினார். அந்த வகையில் தன்னம்பிக்கையுடன் உழைப்பால் உயர்ந்த விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement