- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அந்த 3 மாநிலத்துல பிறக்கலன்னா.. இந்திய அணியில் சான்ஸ் கஷ்டம்.. ருதுராஜ் பற்றி உத்தப்பா ஆதங்க பேட்டி

இந்திய கிரிக்கெட் அணி 2026 புத்தாண்டில் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. வரும் ஜனவரி 11ஆம் தேதி துவங்கும் அந்தத் தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி விளையாட உள்ளது. அந்த அணியில் காயத்திலிருந்து குணமடைந்து வந்துள்ள ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் துணைக் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அதற்காக திலக் வர்மா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் அணியிலிருந்து கழற்றி விடப்பட்டார்கள். அதில் நீண்ட காலம் கழித்துப் போராடி கடந்த தென்னாப்பிரிக்க தொடரில் வாய்ப்பு பெற்ற ருதுராஜ் 2வது போட்டியில் தனது முதல் சதத்தை அடித்து அசத்தலாக விளையாடினார். அடுத்து நடைபெற்ற 2025/26 விஜய் ஹசாரே கோப்பையிலும் அவர் மகாராஷ்டிரா அணிக்காக சதத்தை அடித்து நல்ல ஃபார்மில் இருக்கிறார்.

- Advertisement -

3 மாநிலத்தில் பிறக்கலன்னா:

இருப்பினும் அடுத்ததாக நடைபெறும் நியூஸிலாந்து தொடரில் அவருக்கு இந்திய அணியில் பெஞ்சில் அமரும் வாய்ப்பு கிடைக்காதது பல ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்தது. இந்நிலையில் இந்திய அணியில் கிடைக்கும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்வது மிகவும் கடினமான செயல் என்று முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கூறியுள்ளார். அதிலும் மும்பை, டெல்லி அல்லது பஞ்சாப் ஆகிய 3 மாநிலங்களுக்கு வெளியே பிறக்கும் வீரர்களுக்கு அவ்வளவு சுலபமாக வாய்ப்பு கிடைக்காது என்றும் உத்தப்பா கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நண்பா இதை செயல்முறையாக்குவது மிகவும் கடினம். நீங்கள் அதை அர்த்தமுள்ளதாக்க வேண்டும் அல்லவா? இது ஒரு பெரிய சுமையை எடுக்கும். அதன் காரணமாக நீங்கள் சாய்ந்து கொள்ள ஒரு நல்ல வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். அதை செய்வது எளிதான காரியமல்ல”

- Advertisement -

உத்தப்பா ஆதங்கம்:

“இந்த பரபரப்பான சூழ்நிலைகளில் நீங்கள் நேர்மறையான வழிகளைப் பார்க்க வேண்டும். இந்திய கிரிக்கெட்டில் தொடர்ந்து உயிர்வாழும் பயன்முறையில் செயல்படுவது உங்களுடைய சவால்களில் ஒன்றாகும். அந்த மனநிலையில் இருந்து மாறுவதற்கு மிகுந்த மீள்தன்மை, சுய பேச்சு, நேர்மறையான வலுவூட்டல் தேவை. நீங்கள் வெள்ளி வரிகளைத் தேடும் ஒருவராக இருக்க வேண்டும்”

இதையும் படிங்க: இந்தியாவுக்காக இப்படியா பதில் சொல்வீங்க? எங்களை பாத்தா சீரியஸா தெரியலயா? ஐசிசியை சாடிய வங்கதேசம்

“நீங்கள் வாய்ப்பைப் பெற தொடர்ந்து சண்டையிட வேண்டும். குறிப்பாக நீங்கள் மும்பை, டெல்லி அல்லது பஞ்சாப் ஆகிய 3 பெரிய மாநிலங்களிலிருந்து வராமல் போனால் இன்னும் கூடுதலாக சண்டை செய்ய வேண்டும்” என்று கூறினார். உத்தப்பா கூறுவது போல இந்திய அணியில் தமிழ்நாடு போன்ற சில மாநிலங்களில் இருக்கும் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது அவ்வளவு சுலபமல்ல என்றால் மிகையாகாது.

- Advertisement -