உங்க சுயநலத்துக்காக இந்தியாவை இப்படி தோற்கடிச்சுட்டிங்களே.. கேஎல் ராகுல் மீது உத்தப்பா அதிருப்தி

Robin Uthappa
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அத்தொடரின் 3வது போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்த இங்கிலாந்து 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. முன்னதாக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 3வது போட்டியில் இந்தியா தோல்வியை சந்திக்க ரிஷப் பண்ட் ரன் அவுட்டானது திருப்பு முனையாக அமைந்ததாக பலரும் தெரிவித்தார்கள்.

ஏனெனில் அந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ராகுல் – பண்ட் ஆகியோர் ஜோடி சேர்ந்து 141 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார்கள். அதனால் இந்தியா குறைந்தது 50 ரன்கள் முன்னிலை பெறுவதற்கான சூழ்நிலை உருவானது. அப்போது 3வது நாள் உணவு இடைவெளிக்கு முந்தைய கடைசி ஓவரில் 98* ரன்னில் இருந்த ராகுல் சதமடிக்க விரும்பினார்.

- Advertisement -

சுயநலமான சதம்:

அதனால் அவருக்கு ஸ்ட்ரைக்கை கொடுத்து சதத்தை அடிக்க உதவும் நோக்கத்தில் ரிஷப் பண்ட் வேகமான சிங்கிள் எடுக்க முயற்சித்தார். அப்போது ஒரு நொடி யோசித்த அவர் ராகுல் ஓடத் துவங்கியதால் வேறு வழியின்று ஓடி பென் ஸ்டோக்ஸிடம் 78 ரன்னில் ரன் அவுட்டானார். மறுபுறம் உணவு இடைவெளிக்குப் பின் சதத்தை அடித்த ராகுல் 100 ரன்னில் அவுட்டானார்.

அதனால் கடைசியில் இந்தியா ஸ்கோரை (387) சமன் செய்ததே தவிர முன்னிலைப் பெறவில்லை. இந்நிலையில் சுயநலத்துடன் தன்னுடைய சதத்தை அடிக்க வேண்டும் என்பதற்காக ராகுல் இந்தியாவை தோற்கடித்ததாக முன்னாள் வீரர் ராபின் முத்தப்பா அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “உணவு இடைவேளைக்கு முன் ராகுல் தனது சதத்தை ஏன் முக்கியமாக கருதினார் என்று யாராவது அவரிடம் கேட்டீர்களா?”

- Advertisement -

உத்தப்பா விமர்சனம்:

“நீங்கள் ஏன் அப்படி நினைத்தீர்கள்? சதத்தை ஏன் ஆழமாக கருதினீர்கள்? என்று யாராவது ராகுலிடம் கேட்டால், சொந்த சாதனைகளைப் பற்றிய அந்த முழு விஷயத்தின் அடிப்பகுதி தெரிய வந்திருக்கும். அந்த சமயத்தில் நாம் நன்கு செட்டிலாகி விட்டதால் அட்டாக் செய்யலாம் என்று ராகுல் – பண்ட் ஆகியோர் பேசியிருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன்”

இதையும் படிங்க: 4 ஆவது டெஸ்டில் பும்ரா கண்டிப்பா ஆடுவாரு.. ஆனாலும் இந்த 2 விடயம் ரொம்ப முக்கியம் – நிர்வாகம் எடுத்துள்ள முடிவு

“அந்த சமயத்தில் ராகுல் “உணவு இடைவெளிக்கு முன் சதத்தை அடித்தால் இடைவெளி முடிந்ததும் உடனடியாக இங்கிலாந்தை அட்டாக் செய்யலாம், நீங்கள் ஒரு புறத்தை பிடித்து நங்கூரமாக விளையாடுங்கள், நான் இங்கிலாந்து அட்டாக் செய்து போட்டியை இந்தியாவின் பக்கம் முழுமையாக எடுத்து வருகிறேன்” என்று ரிஷப்பிடம் தெரிவித்திருக்கலாம். இதுவே அந்த சமயத்தில் அவர்களுடைய சிந்தனையாக இருந்திருக்கக்கூடும்” என்று கூறினார்.

Advertisement