யுவி, ராயுடுவை சப்போர்ட் பண்ணதுக்காக.. விராட் கோலியுடன் என் நட்பு உடைஞ்சு போச்சு.. உத்தப்பா வேதனை பேட்டி

Robin Uthappa 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா ஓய்வுக்குப் பின் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். 2007 டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு பங்காற்றிய அவர் அஸ்வின் போல யூடியூப் சேனலில் தம்முடைய கருத்துகளையும் தெரிவித்து வருகிறார். அந்த வரிசையில் ராயுடு மற்றும் யுவராஜ் சிங் ஆகியோருக்கு அப்போதைய கேப்டன் விராட் கோலி ஆதரவளிக்கவில்லை என்று ஒருமுறை ராயுடு விமர்சித்திருந்தார்.

2017 – 18 காலகட்டங்களில் சிறப்பாக விளையாடிய ராயுடு இந்தியாவுக்காக 2019 உலகக் கோப்பையில் 4வது இடத்தில் விளையாடுவதற்காக தயாராக இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரை கழற்றி விட்ட தேர்வுக்குழு முப்பரிமாண வீரர் தேவை என்று சொல்லி விஜய் சங்கரை தேர்ந்தெடுத்தது. அதே போல ஜாம்பவான் யுவராஜ் சிங் புற்றுநோய் அறுவை சிகிச்சைக்கு பின் தடுமாற்றமாகவே விளையாடினார்.

- Advertisement -

ஒரே ஒரு விமர்சனத்தால்:

குறிப்பாக 2017 சாம்பியன்ஸ் டிராபியில் ஜொலிக்காத அவர் இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்டார். அந்த காலகட்டங்களில் கேப்டனாக இருந்த விராட் கோலி அவர்களுக்கு தகுதியான வாய்ப்பையும் ஆதரவையும் வழங்கவில்லை என்று உத்தப்பா விமர்சித்திருந்தார். இந்நிலையில் அப்படி விமர்சித்தது விராட் கோலியுடனான நெருங்கிய நட்பை உடைத்துள்ளதாக உத்தப்பா வேதனை தெரிவித்துள்ளார்.

எனவே விமர்சனம் செய்வதில் தமக்கு பாடம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கும் உத்தப்பா இது பற்றி பேசியது பின்வருமாறு. “அந்த மொத்த விவாதமும் விராட் கோலியை பேசுவது பற்றியது கிடையாது. அந்தப் பேட்டியில் என்னுடைய கருத்து என்ன என்பது பற்றியதாகும். என்னிடம் கேள்வி கேட்கப்பட்டது. அந்த சமயத்தில் நான் விராட் கோலியின் உணர்வுகளை பற்றி நினைக்கவில்லை”

- Advertisement -

உடைந்த நட்பு:

“நான் சரியான விஷயத்திற்காகவே குரல் கொடுத்தேன் என்பதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் அன்றைய நாள் கொடுத்தப் பேட்டியால் விராட் கோலியுடனான என்னுடைய உறவு அல்லது தோழமை பாதிக்கப்பட்டது. அது பற்றி விராட் கோலியிடம் பேசிய போது, ஏற்கனவே அது குறித்து அவரிடம் பேசியிருக்க வேண்டும் என்ற பாடத்தை கற்றுக் கொண்டேன்”

இதையும் படிங்க: ஸ்ரேயாஸ் பற்றி உண்மையை சொன்னதுக்கு கோபப்படாதீங்க.. கவாஸ்கர் விமர்சனம் பற்றி ப்ராட் ஹாடின்

“என்னுடைய அனுபவம் பற்றி அவரிடம் பேசவில்லை. எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவர் அவருடைய தலைமையில் கண்ட அனுபவத்தைப் பற்றி மட்டுமே நான் பேசினேன். ஒவ்வொரு கேப்டனுக்கும் தங்களுடைய வழியில் நடப்பதற்கான உரிமை உண்டு. அதே போல ஒவ்வொருவரும் தங்களுடைய கருத்தைக் கூற உரிமை உண்டு. ஆனால் அதைப் பற்றி நான் பேசுவதற்கு முன் விராட் கோலியிடம் பேசியிருக்க வேண்டும். எனவே கிரிக்கெட்டில் சகோதரத்துவத்துடன் இருப்பவர்களைப் பற்றி பேசுகையில் கவனத்துடன் இருக்க வேண்டும் என்ற பாடத்தை கற்றுக் கொண்டேன்” என்று கூறினார்.

Advertisement