2017 வதந்தியை நம்பி கருண் நாயர்.. என்கிட்ட பேசுறத நிறுத்திட்டாரு.. 99 போட்டியுடன் வெளியேறியது பற்றி உத்தப்பா

Robin Uthappa
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா 46 ஒருநாள் மற்றும் 13 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2006 – 2015 வரையிலான காலகட்டங்களில் விளையாடிய அவர் 2007 டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் முக்கிய பங்காற்றினார். முன்னதாக கர்நாடகாவை சேர்ந்த அவர் 2002 முதல் உள்ளூர் தொடர்களில் விளையாடி வந்தார்.

கர்நாடகாவுக்காக 99 முதல் தர போட்டிகளில் விளையாடிய உத்தப்பா 2017ஆம் ஆண்டு அந்த அணியை விட்டு வெளியேறினார். பின்னர் சௌராஷ்ட்ரா மற்றும் கேரளாவுக்காக விளையாடிய அவர் மொத்தம் 142 முதல் தர போட்டிகளில் விளையாடி ஓய்வு பெற்றார். இந்நிலையில் கர்நாடகா அணியிலிருந்து 99 போட்டிகளுடன் விலகிய காரணத்தை உத்தப்பா பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

கருண் நாயருடன் முறிந்த நட்பு:

2016 காலகட்டங்களில் சிறப்பாக விளையாடிய தமக்கு இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்ததாக அவர் கூறியுள்ளார். ஆனால் அப்போது தம்மை கண்டுகொள்ளாத தேர்வுக்குழு மற்ற வீரர்களுக்கு இலவசமாக வாய்ப்பளித்ததை விமர்சித்ததாக உத்தப்பா தெரிவித்துள்ளார். அப்போது 2016இல் இந்தியாவுக்கு அறிமுகமாக தம்மை தான் பொறாமையில் விமர்சிக்கிறார் என்று கருண் நாயர் தவறாக புரிந்து கொண்டதாக உத்தப்பா கூறியுள்ளார்.

அதனால் கருண் நாயர் தம்மிடம் பேசியதை நிறுத்தி விட்டதாக தெரிவிக்கும் உத்தப்பா இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “அந்த சமயத்தில் நான் இந்திய டெஸ்ட் அணியில் விளையாட முயற்சித்தேன். அப்போது சிறப்பாக விளையாடியும் என்னை தேர்வுக்கு கருத்தில் கொள்ளாததால் விரக்தியடைந்தேன். அதனால் ஏற்பட்ட உணர்வுகள் அனைத்தும் வார்த்தைகளாக வந்திருக்கலாம்”

- Advertisement -

வெளியேறிய உத்தப்பா:

“அப்போது ஒரு பேட்டியில் டெஸ்ட் போட்டிகளுக்கான தொப்பி எளிதாக வழங்கப்படுகிறது, அது கடினமாக உழைப்பவர்களைக் காட்டிலும் சிலருக்கு இலவசமாக வழங்கப்படுவதாக சொன்னேன். அதை எங்களுடைய கர்நாடகா அணியில் ஒருவர் ஒரு பகுதியை மட்டும் எடுத்து கருண் நாயரைப் பற்றி சொன்னதாக அவரிடம் சொன்னார். அதனால் என்னுடைய தம்பியை போல் இருந்த கருண் நாயர் என்னை ஒதுக்கினார்”

இதையும் படிங்க: பாக் அதை சரி பண்றத விட்டுட்டு.. 20 வருடமாக ஐசிசியில் அசத்தும் இந்தியாவை குறை சொல்லாதீங்க.. கபில் தேவ் சாடல்

“ஏனெனில் அந்த சமயத்தில் அவர் டெஸ்ட் தொப்பியை நெருங்கிக் கொண்டிருந்தார். அதை என்னிடம் விசாரிக்காத அவர் வதந்தியை நம்பி என்னிடமிருந்து தன்னை தொலைவுப் படுத்திக்கொண்டார். அதே போல அணியை உடைக்கும் வகையில் நான் நடந்து கொள்கிறேன் என்றால் கையைத் தூக்குங்கள் என்று கர்நாடக வீரர்களிடம் கேட்டேன். ஒழுங்கமைக்கப்பட்ட குரல் காரணமாக அவர்கள் யாரும் கையை உயர்த்தவில்லை. அதனால் உணர்வுபூர்வமாக உடைந்த நான் நல்ல செயல்திறனைக் கொடுக்க முயற்சித்தும் எதுவும் வரவில்லை” என்று கூறினார்.

Advertisement