இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கிரேக் சேப்பல் இருந்த காலங்களை ரசிகர்களால் மறக்க முடியாது. முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான அவர் கேப்டன் சௌரவ் கங்குலி மற்றும் சீனியர் இந்திய வீரர்களுடன் முரண்பாடாக செயல்பட்டார். அதனால் 2007 உலகக் கோப்பையில் ராகுல் டிராவிட் தலைமையில் இந்திய அணி வங்கதேசத்திடம் தோற்று லீக் சுற்றுடன் வெளியேறியதை மறக்க முடியாது.
இந்நிலையில் கிரேக் சேப்பல் இளம் வீரர்களுக்கு ஆதரவாக இருந்ததாக அவருடைய தலைமையில் விளையாடிய ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். ஆனால் சச்சின் டெண்டுல்கர், கங்குலி போன்ற சீனியர் வீரர்களுடன் அவர் ஒன்றாக செயல்படவில்லை என்றும் உத்தப்பா கூறியுள்ளார். மேலும் தாம் நினைத்தது போல் நடக்கவில்லையெனில் இந்திய அணியின் திட்டங்களை சேப்பல் வெளியில் பகிர்ந்ததாகவும் உத்தப்பா தெரிவித்துள்ளார்.
சுமாரான கோச்சிங்:
இது பற்றி உத்தப்பா பேசியது பின்வருமாறு. “அந்த சமயங்களில் அணியின் சூழ்நிலை மோசமாக இருந்தது. அவள் ஒரு நிகழ்ச்சி நிரலை நடத்தினார். அவர் ஆஸ்திரேலியாவின் மன நிலையில் இருந்து பயிற்சியை கொடுத்தார். இப்படித்தான் ஆஸ்திரேலியாவில் செய்வோம் என்று அவர் சொன்னார். அதனாலேயே அவர் இந்திய அணியின் கலாச்சாரத்தில் மதிக்கப்படவில்லை”
“இந்திய அணிக்கு வந்த அவர் ஆஸ்திரேலிய கலாச்சாரத்தை கொண்டு வர முயற்சித்தார். அதனால் இந்திய அணியின் சூழ்நிலை மோசமாக மாறியது. அதே போல விஷயங்கள் தன்னுடைய திட்டங்களுக்கு தகுந்தார் போல் செல்லவில்லை எனில் தகவல்களை கசிய விடுவதையும் அவர் வாடிக்கையாக வைத்திருந்தார். அது இந்திய வீரர்களிடம் நன்றாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவர் இந்திய அணியின் தகவல்களை கசிய விட்டார்”
லீக் செஞ்சாரு:
“அதே சமயம் இளம் வீரராக இந்திய அணியில் நுழைந்த போது அவர் என்னிடம் நன்றாக நடந்து கொண்டார். 20 வயது வீரராக அணிக்கு வந்த நான் இந்தியாவுக்காக ஒரு உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவுடன் வந்தேன். அந்த வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும் போது நீங்கள் பாஸ் போல உணர்வீர்கள். அணிக்காக அனைத்தையும் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் நான் விளையாடினேன்”
இதையும் படிங்க: பேட்ஸ்மேனாகவே சொதப்பிய கம்பீர் செட்டாக மாட்டாரு.. டெஸ்டுக்கு அந்த ஜாம்பவானை கோச்சா போடுங்க.. பனேசர்
“கிரேக் சேப்பல் காலத்தில் தான் உடல் வலிமை பயிற்சி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆஸ்திரேலிய அணியில் இருந்த அது இந்திய அணியில் இல்லாமல் இருந்தது. எனவே இந்திய அணியிலும் அவர் அதை கொண்டு வந்தார். ஆனால் அதற்காக அடிப்படை மரியாதைகளை காண்பிக்காமல் அதை எங்கள் மீது அவர் திணிக்க முயற்சித்தார். அது சீனியர் வீரர்களிடம் நன்றாக செல்லவில்லை” என்று கூறினார்