பேட்ஸ்மேனாகவே சொதப்பிய கம்பீர் செட்டாக மாட்டாரு.. டெஸ்டுக்கு அந்த ஜாம்பவானை கோச்சா போடுங்க.. பனேசர்

Monty Panesar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டுக்குப் பின் கௌதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார். அவருடைய தலைமையில் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி அசத்தியது. ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கையிடம் 27 வருடங்கள் கழித்து தோற்ற இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிடம் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் வெளியேறியது.

அதனால் கௌதம் கம்பீர் தற்சமயத்தில் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு கௌதம் கம்பீர் பொருந்த மாட்டார் என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் மான்டி பனேசர் கூறியுள்ளார். எனவே ராகுல் டிராவிட் அல்லது விவிஎஸ் லக்ஷ்மன் போன்றவர்கள் இந்தியாவின் டெஸ்ட் பயிற்சியாளராக செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

- Advertisement -

செட்டாக மாட்டாரு:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கௌதம் கம்பீருக்கு அதிகமான பணிச்சுமை இருக்கிறது என்று நினைக்கிறேன். அவர் இப்போது தான் பயிற்சியாளராக வந்துள்ளார். சில நேரங்களில் அது சீனியர் வீரர்களுக்கும் கடினமான சூழ்நிலைகளை ஏற்படுத்தும். குறிப்பாக சில வருடங்களுக்கு முன்பாக இவருடன் சேர்ந்து நாம் விளையாடினோம்”

“ஆனால் தற்போது இவர் கிரிக்கெட்டை எப்படி விளையாட வேண்டும் என்று நமக்கு சொல்கிறார் என சில சீனியர் வீரர்கள் நினைப்பார்கள். அதே போல ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் பேட்ஸ்மேனாக அவருடைய புள்ளிவிவரங்கள் நன்றாக இல்லை. ஆஸ்திரேலியாவில் கௌதம் கம்பியின் சராசரி வெறும் 23 ஆகும். இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அந்தளவுக்கு கூட அவர் சராசரியை கொண்டிருக்கவில்லை”

- Advertisement -

லக்ஷ்மன் சரியானவர்:

“வெளிநாடுகளில் நகரும் பந்துகளை எப்போதும் கம்பீர் நன்றாக எதிர்கொண்டதில்லை. எனவே கௌதம் கம்பீர் பயிற்சியாளர் பதவியை மிகவும் சீரியஸாக எடுத்துக் கொண்டாரா அல்லது அவர் ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்த வேண்டுமா என்பது பற்றி இந்திய தேர்வாளர்கள் முடிவெடுக்க வேண்டும். டெஸ்ட் பயிற்சியாளராக லக்ஷ்மன் போன்றவரை கொண்டு வரலாம். அவரும் ராகுல் டிராவிட் போல அனைத்து வகையான சூழ்நிலைகளிலும் வெற்றிகரமாக செயல்பட்டவர்”

இதையும் படிங்க: ஒன்மேன் ஆர்மி பும்ரா இந்தியாவை கீழே விடல.. கோலி ஃபார்முக்கு திரும்ப இதை சொல்லுங்க போதும்.. சோயப் அக்தர்

“அனைத்து சூழ்நிலைகளிலும் அசத்திய ஏதேனும் இந்திய ஜாம்பவான் டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக இருக்கலாம். குறிப்பாக லக்ஷ்மன் போன்றவர் ஸ்விங் பந்துகளை உங்களால் மேலே அடிக்க முடியாது என்று சொன்னால் இந்திய வீரர்கள் கேட்பார்கள். ஆனால் கௌதம் கம்பீர் போன்றவர் சொன்னால் அவர் சொல்லட்டும் நாம் நம்முடைய இயற்கையான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்ற வகையில் இந்திய வீரர்கள் செயல்படுவார்கள்” எனக் கூறினார்.

Advertisement