சி.எஸ்.கே அணியில் சுரேஷ் ரெய்னாவின் 3 ஆம் இடத்தை பிடிக்கப்போகும் அதிரடி வீரர் – புது பிளான் இதான்

Raina
- Advertisement -

இந்த ஆண்டு நடைபெற உள்ள 14ஆவது ஐபிஎல் தொடர் வருகிற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. எனவே இந்த 14வது ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணிகளும் தற்போது மிக தீவிரமாக ஒரு பக்கம் தயாராகி வருகின்றன. ஐபிஎல் போட்டிகளுக்கான தேதி மற்றும் இடத்தை பற்றிய கால அட்டவனையை இன்னும் பிசிசிஐ அறிவிக்கவில்லை. இது பற்றி பிசிசிஐ தலைவர் கங்குலியிடம் கேட்டதற்கு இதற்கான அட்டவனை விரைவில் அறிவிக்கப்படும் என்று சமீபத்தில் கூறியுள்ளார்.

- Advertisement -

இதுவரை நடந்த அனைத்து ஐபிஎல் தொடர் வரலாற்றிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஆண்டு மட்டுந்தான் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் பரிதாபமாக வெறியேறியது. அது மட்டுமில்லாமல் டேபிள் பாயின்ட்ஸில் ஏழாம் இடத்தில் முடித்தது.இது சென்னை ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.இதை கருத்தில் கொண்டே சிஎஸ்கே ராபின் உத்தப்பாவை டிரேட் முறையில் ராஜஸ்தானிடம் இருந்து வலைத்து போட்டது.

சமீபத்தில் நடந்த ஏலத்திலும் மொயின் அலி, கிருஷ்ணப்ப கவுதம், ஹரி நிஷாந்த், ஹரிஷங்கர் ரெட்டி, சட்டீஸ்வர் புஜாரா, பகத் வர்மா போன்ற வீரர்களை தொகை குடுத்து வாங்கியது.
அனைத்து ரசிகர்கள் மனதிலும் எழுந்த ஒரு கேள்வி உத்தப்பாவை எதுக்கு டிரேட் முறையில் மெனக்கெட்டு சிஎஸ்கே வாங்கியது என்பதே.ஆனால் காரணம் இல்லாமல் சிஎஸ்கே இதை செய்யவில்லை.அவர் சில காலமாக உள்ளூர் ஆட்டங்களில் சிறந்த ஆட்டத்தை வெளிபடுத்தி வருகிறார்.

Uthappa

சமீபத்தில் நடந்து வரும விஜய் ஹசாரே டிராபியிலும் தொடரில் அதிரடி காட்டி வருகிறார். இதுவரை ஆடியுள்ள மூன்று போட்டிகளிலும் அரை சதம் விளாசி சிறந்த ஃபார்மில் உள்ளார்.இவரது சமீபகால ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் அதன் ரசிகர்களுக்கம் புதிய நம்பிக்கையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது. ராபின் உத்தப்பா தற்போது சிறந்த ஃபார்மில் இருப்பதால் சிஎஸ்கே அணிக்கு காலாகாலமாக ஒன் டவுன் வீரராக களமிறங்கும் ரெய்னாவின் இடம் பறி போய் விடுமோ என்கிற குழப்பம் எழுந்துள்ளது.

uthappa

ஏனெனில் சுரேஷ் ரெய்னா சையது முஷ்டாக் அலி தொடரிலும் விஜய் ஹாசரே டிராபி தொடரிலும் சொல்லி கொள்ளும் அளவுக்கு பெரிதாக விளையாடவில்லை. இதனால் ரெய்னாவின் ஒன் டவுன் இடத்தை ராபின் உத்தப்பா பிடித்து விடுவார் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கூறிவருகின்றனர். ஒரு வகையில் உத்தப்பாவின் ஆட்டம் உற்சாகத்தை கொடுத்தாலும் ரெய்னாவின் மோசமான ஃபார்ம் உத்தப்பாவுக்கு சாதமாகி விடுமோ என்று ரெய்னா ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

Advertisement