- Advertisement -
ஐ.பி.எல்

தோனி செய்தது சுத்தமா பிடிக்கல.. அவரோட இந்த முடிவை நான் ஏத்துக்க மாட்டேன் – ராபின் உத்தப்பா காட்டம்

ஆர்.சி.பி அணிக்கு எதிராக நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் முக்கிய லீக் ஆட்டத்தில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 50 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணியிடம் தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் 17 ஆண்டுகள் கழித்து சிஎஸ்கே அணி ஆர்சிபி அணிக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. நேற்றைய போட்டியில் சென்னை அணி அடைந்த இந்த தோல்வி பலரது மத்தியிலும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

தோனியை செய்தது ஏற்றுக்கொள்ள மாட்டேன் : ராபின் உத்தப்பா

ஏனெனில் 197 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணி ஒரு கட்டத்தில் 80 ரன்களுக்கு எல்லாம் 6 விக்கெட்டை இழந்து பெரிய தடுமாற்றத்தை சந்தித்தது. அப்போது எட்டாவது வீரராக தோனி களத்திற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு முன்னதாக அஸ்வின் வந்து 8 பந்துகளில் 11 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதன் பின்னரே ஒன்பதாவது வீரராக தோனி களமிறங்கினார்.

- Advertisement -

இறுதி நேரத்தில் அவர் 16 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 30 ரன்கள் குவித்தாலும் ஒரு முழுநேர பேட்ஸ்மேனான தோனி முன்கூட்டியே களத்திற்கு வந்திருந்தால் இன்னும் இலக்கினை நோக்கி நெருங்கி சென்றிருக்கலாம் என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது. ஏனெனில் தற்போது சென்னை அணியின் மிடில் ஆர்டரில் அதிக அனுபவம் உடைய வீரராக பார்க்கப்படும் தோனி முன்கூட்டியே களமிறங்கி அதிரடியாக விளையாடியிருக்க முடியும்.

ஆனால் பிடிவாதமாக தோனி இப்படி கடைசி கட்டத்தில் இறங்கியது பலரது மத்தியிலும் கண்டனங்களை பெற்றுள்ளது. குறிப்பாக நேற்றைய போட்டியில் ஒரு கட்டத்தில் சென்னை அணியின் வெற்றிக்கு ஒரு ஓவருக்கு 16 ரன்கள் தேவைப்படும் வேளையிலும் தோனி முன்கூட்டியே களமிறங்காமல் கடைசியாக களம் இறங்கினார். இதுகுறித்து பேசிய முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறுகையில் : தோனி ஒன்பதாவது இடத்தில் பேட்டிங் செய்வதற்கு ஆதரவாக நான் ஒருபோதும் இருக்க மாட்டேன்.

- Advertisement -

ஏனெனில் அவர் இப்படி ஒன்பதாவது வீரராக களமிறங்குவது அணியின் நலனுக்கு உகந்ததாக இருக்காது என்று கூறியிருந்தார். மேலும் இந்த விடயம் குறித்து பேசிய முன்னாள் சிஎஸ்கே வீரரான ராபின் உத்தப்பாவும் தோனியின் இந்த முடிவை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தோனி செய்தது சுத்தமாக பிடிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணியை ஆர்சிபி அணி வீழ்த்தியுள்ளது மிகப்பெரிய வெற்றி.

இதையும் படிங்க : 3000 ரன்ஸ்.. ஐபிஎல் வரலாற்றின் சிறந்த ஆல் ரவுண்டராக ரவீந்திர ஜடேஜா.. வேறு வீரர்கள் செய்யாத சாதனை

இந்த வெற்றி அவர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்திருக்கும். தோனி ஒன்பதாவது இடத்தில் பேட்டிங் செய்ய வருவதெல்லாம் அர்த்தமுள்ளதே கிடையாது. அவருடைய இந்த முடிவை நான் ஏற்றுக் கொள்ளவும் மாட்டேன். அவர் முன்கூட்டியே வந்து இருந்தால் நிச்சயம் சிஎஸ்கே அணி இலக்கை நோக்கி நெருக்கமாக சென்றிருக்கலாம் என்றும் அது ரன் ரேட்டுக்கும் உதவியிருக்கும் என ராபின் உத்தப்பா கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -