அபிஷேக் சர்மா இளம்வயது சேவாக் போன்றவர்.. அவரிடம் இருந்து அதை எதிர்பார்ப்பது தவறு – உத்தப்பா ஆதரவு

Uthappa
- Advertisement -

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரராக விளையாடிய அபிஷேக் ஷர்மா 8 பந்துகளை மட்டுமே சந்தித்து ஒரு பவுண்டரியுடன் 7 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். அவரது மோசமான ஆட்டம் அனைவரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதோடு அவரை இந்திய அணையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன.

அபிஷேக் சர்மா சேவாக்கை போன்றவர் :

ஏனெனில் இந்த ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகிய அவர் இதுவரை 9 போட்டிகளில் விளையாடிய அவர் ஒரு சதத்துடன் 166 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார். ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்த ஆண்டு ஆரம்பத்தில் சதம் அடித்து அசத்திய அவர் அதனை தொடர்ந்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார். ஐபிஎல் தொடரில் அதிரடியான ஆட்டத்தை விளையாடிய அவர் சர்வதேச கிரிக்கெட்டில் திணறி வருகிறார்.

- Advertisement -

இதன் காரணமாக அவரை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இந்நிலையில் அபிஷேக் சர்மா இளம் வயது சேவாக் போன்றவர் அவரை உடனடியாக அணியிலிருந்து நிக்கக்கூடாது என முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : அபிஷேக் சர்மாவிடம் தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தை பார்க்க முடியாது. அவரைப் போன்ற ஒரு வீரர் ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடியவர்.

அவரை சுதந்திரமாக விளையாட வைத்தால் நிச்சயம் அவரால் அதிரடியான ரன் குவிப்பை வழங்க முடியும். 2000-ஆவது ஆண்டுகளில் சேவாக் இதையே தான் செய்து வந்தார். சேவாக்கிடம் இருந்து நிலையான ஆட்டத்தை எதிர்பார்க்க முடியாது. ஆனால் அவர் அதிரடியாக விளையாட ஆரம்பித்துவிட்டால் அது அணிக்கு மிகப்பெரிய பலமாக அமையும். எப்பொழுதுமே அபிஷேக்சர்மா போன்ற வீரர்கள் 100 ரன்களை அடிப்பதை விட விரைவாக 50-60 ரன்கள் அடித்தால் அது இந்திய அணிக்கு நல்ல அதிவேகமான துவக்கத்தை கொடுக்கும்.

- Advertisement -

எனவே அவரைப் போன்ற வீரரை வீரிடமிருந்து தொடர்ச்சியான நிலையான ஆட்டத்தை எதிர்பார்க்கக் கூடாது. அதிரடியான துவக்கத்தை மட்டுமே நாம் எதிர்பார்க்க வேண்டும். அவருக்கான சுதந்திரத்தை வழங்கி அவரை அவரது போக்கில் விளையாட விட்டால் நிச்சயம் இந்திய அணிக்காக பல போட்டிகளில் வெற்றி பெற்று தரக்கூடிய ஆட்டத்தை அவர் வெளிப்படுத்துவார்.

இதையும் படிங்க : ஆஸியில் தோற்றால் கெளதம் கம்பீரை டெஸ்ட் பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கும் பிசிசிஐ? வெளியான தகவல்

எனவே அவரை அணியிலிருந்து நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என ராபின் உத்தப்பா கூறியுள்ளார். அவர் கூறியது போன்றே இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் விளையாடியிருந்த அபிஷேக் சர்மா 204 ரன்கள் ஸ்ட்ரைக் ரேட்டுடன் 484 ரன்கள் குவித்திருந்தார். அதிலும் குறிப்பாக அதில் பெரும்பாலான ரன்கள் பவுண்டரிகளின் மூலம் வந்தவை. குறிப்பாக இந்த ஆண்டு மட்டும் 42 சிக்ஸர், 36 பவுண்டர்களை அவர் விளாசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement