மீண்டும் நடக்கப்போகும் ஜாம்பவான்கள் கிரிக்கெட் டி20 தொடர், வெளியான தேதி – ரசிகர்கள் மகிழ்ச்சி

sachin
- Advertisement -

கிரிக்கெட்டில் தங்களது அபாரத் திறமைகளால் நாட்டுக்காக வெற்றிகளை பெற்றுக் கொடுத்த சச்சின் டெண்டுல்கர் போன்ற ஜாம்பவான்கள் ரசிகர்களின் மனதில் என்றும் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளனர். இருப்பினும் வயது காரணமாக ஓய்வடைந்த அவர்களின் ஆட்டத்தை மீண்டும் பார்க்கவே முடியாது என்ற நிலையில் இருந்த ரசிகர்களுக்கு வரப்பிரசாதமாக கடந்த 2020-ஆம் ஆண்டு ரோட் சேஃப்டி வேர்ல்டு சீரீஸ் என்ற பெயரில் ஜாம்பவான்கள் பங்கு பெரும் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்றது.

sachin

- Advertisement -

கடந்த 2020 மார்ச் மாதம் நடைபெற்ற இந்த தொடரில் சச்சின் டெண்டுல்கர், பிரைன் லாரா, முத்தையா முரளிதரன், பிரெட் லீ என 90ஸ் கிட்ஸ் ரசிகர்களை காலம் காலமாக மகிழ்வித்த ஜாம்பவான்கள் பங்கு பெற்றது பல ரசிகர்களுக்கும் மலரும் நினைவுகளை கொடுத்தது. அதில் இந்தியா லெஜெண்ட்ஸ், இலங்கை லெஜெண்ட்ஸ், தென் ஆப்பிரிக்கா லெஜெண்ட்ஸ், ஆஸ்திரேலியா லெஜெண்ட்ஸ், இங்கிலாந்து லெஜெண்ட்ஸ், வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட்ஸ், வங்கதேசம் லெஜெண்ட்ஸ் என உலகின் டாப் நாடுகளைச் சேர்ந்த ஜாம்பவான்கள் பங்கேற்ற 7 அணிகள் விளையாடியது.

ரத்து செய்யப்பட்ட ரோட் சேஃப்டி வேர்ல்டு சீரீஸ்:
சமீப காலங்களாக சாலைகளில் ஏற்படும் விபத்து காரணமாக பலர் வாழ்வாதாரத்தை இழப்பதால் அதற்கு முடிவு கட்டும் வண்ணமாகவும் சாலை விதிமுறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணமாகவும் நடைபெற்ற இந்த தொடரின் இந்திய அணிக்கு ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கேப்டனாக செயல்பட்டார். லீக் மற்றும் நாக்-அவுட் ஆகிய சுற்றுகளின் அடைப்படையில் நடந்த இந்த தொடரின் முதல் சாம்பியன் பட்டத்தை சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய லெஜெண்ட்ஸ் அணி வென்று சாதனை படைத்தது இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியையும் கௌரவத்தையும் கொடுத்தது.

sachin

அந்த வேளையில் இந்த தொடரின் 2வது சீசன் கடந்த 2021இல் நடைபெற இருந்த நிலையில் கரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. அந்த நிலையில் 2020-ஆம் ஆண்டு நடந்த முதல் சீசனில் ஒரு சில அணிகளுக்காக விளையாடிய வீரர்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டப்படி முழுமையான சம்பளம் அளிக்கப்படவில்லை என்பதால் இந்த தொடர் கைவிடப்படுவதாக வங்கதேசத்தைச் சேர்ந்த ஒரு பிரபல பத்திரிகை கடந்த சில மாதங்களுக்கு முன் செய்தி வெளியிட்டிருந்தது. ஒருவேளை அந்த தொடர் நடைபெற்றாலும் கூட சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் அதில் பங்கேற்க மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

- Advertisement -

மீண்டும் ரோட் சேப்ட்டி வேர்ல்ட் சீரிஸ்:
இந்நிலையில் நடைபெறுமா என சந்தேகப்பட்ட ரோட் சேஃப்டி வேர்ல்டு சீரீஸ் தொடரின் 2வது சீசன் இந்த வருடம் மீண்டும் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி வரும் ஜூன் 4-ஆம் தேதி துவங்கும் இந்த தொடர் வரும் ஜூலை 3-ஆம் தேதி வரை இந்தியாவில் உள்ள லக்னோ, இந்தூர் மற்றும் ஜோத்பூர் ஆகிய 3 முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளது.

sehwag-sachin

இதில் ஏற்கனவே இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய 7 அணிகள் இருந்த நிலையில் இந்த வருடம் புதிதாக நியூசிலாந்து லெஜெண்ட்ஸ் அணியும் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 8 அணிகள் பங்குபெறும் இந்த தொடருக்கான முழு அட்டவணை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இந்த வருடமும் சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், யுவராஜ்சிங், ஜாகீர்கான் என இந்தியாவின் ஓய்வுபெற்ற ஜாம்பவான்கள் பங்கேற்பார்களா என்பது பற்றி அறிவிப்பும் விரைவில் வெளியாக உள்ளது.

விழிப்புணர்வு தொடர்:
ஜாம்பவான்கள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர் என்பதையும் தாண்டி சாலை பாதுகாப்பு விதிமுறைகளை பற்றிய விழிப்புணர்வை இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் எடுத்துச் செல்வதற்காக இந்த தொடர் மீண்டும் நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி இந்திய சாலை பாதுகாப்பு அமைச்சர் நிதின் கட்கரி பேசியது பின்வருமாறு. “கிரிக்கெட் வாயிலாக சாலை பாதுகாப்பு விதிமுறைகளை மக்களிடம் எடுத்துச் செல்லும் ஒரு தொடர் தான் இந்த ரோட் சேஃப்டி வேர்ல்ட் சீரிஸ் தொடராகும். உலகின் ஒவ்வொரு நாடுகளும் சாலை பற்றிய விதிமுறைகளைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும். அதற்கு முதலில் அது பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். அந்த வகையில் இந்த தொடர் இந்திய சாலைகளில் பயணிக்கும் இந்தியர்களை மட்டுமல்லாது உலக அளவில் பயணிக்கும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்புகிறேன்” என கூறினார்.

sachin 1

அதேபோல் இந்தத் தொடரைப் பற்றி இந்திய இளைஞர்கள் மேம்பாடு மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர் பேசியது பின்வருமாறு. “இந்த தொடர் சமூகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி சாலை விதிமுறைகள் பற்றிய விழிப்புணர்வை மக்களின் மனதில் பதியவைக்கும் என நம்புகிறேன். மேலும் இந்த தொடரில் இந்தியாவுடன் ஆஸ்திரேலியா, வெஸ்ட்இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்கதேசம் இலங்கை ஆகிய 8 அணிகள் பங்கேற்க உள்ளன” என தெரிவித்தார். மொத்தத்தில் 90களில் கலக்கிய கிரிக்கெட் ஜாம்பவான்கள் மீண்டும் களத்தில் பார்க்க ஒரு பொன்னான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement