2 நாள் ICU-ல இருந்தும் அரையிறுதியில் விளையாடிய பாக் வீரர் – என்னவொரு டெடிகேஷன்

Rizwan
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய வேளையில் இரண்டாவது அரையிறுதி போட்டி நடைபெற்று முடிந்துள்ளது. இந்த போட்டியில் ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின.

rizwan 2

- Advertisement -

இந்தபோட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 176 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது 19 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் பாகிஸ்தான் அணி இந்த தொடரில் இருந்து வெளியேறியது.

அதேவேளையில் ஆஸ்திரேலிய அணி இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் துவக்கவீரர் ரிஸ்வானுக்கு ஏற்பட்ட நுரையீரல் தொற்று காரணமாக தீவிர சிகிச்சையில் இரண்டு நாட்கள் அனுமதிக்கப்பட்டு இருந்ததாகவும், அதன் பின்னர் அரையிறுதிப் போட்டியில் தான் விளையாடியே ஆகவேண்டும் என்று அர்ப்பணிப்புடன் வந்து போட்டியில் விளையாடினார் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

rizwan 1

மேலும் அவர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்ட புகைப்படமும் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. கடும் உடற்பாதிப்புக்கு இடையே தனது உடல்நிலை பற்றிக் கூட கவலைப்படாமல் முக்கியமான இந்த அரையிறுதி ஆட்டத்தில் 52 பந்துகளை சந்தித்த ரிஸ்வான் 4 சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் குவித்து அசத்தினார்.

- Advertisement -

இதையும் படிங்க : தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்திற்கான அணியில் ஒருநாள் போட்டிக்கும் புதிய கேப்டன் – அப்போ கோலியின் நிலைமை?

தனது உடல்நிலையை பற்றிக்கூட கவலைப்படாமல் அணிக்காக அர்ப்பணிப்புடன் விளையாடிய ரிஸ்வானுக்கு பல தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. மேலும் இப்படி ஒரு நிலையிலும் நாட்டிற்காக விளையாடிய அவரது எண்ணத்திற்கு ரசிகர்களும் தங்களது பாராட்டுகளை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement