ரஷீத் கான் பந்துவீச வரும்போது ராகுல் திவாதியா வெளுத்துக்கட்ட இதுவே காரணம் – ரியான் பராக் வெளிப்படை

Parag-1
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 26 வது லீக் போட்டி நேற்று முதல் போட்டியாக துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற வார்னர் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.

srhvsrr

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக மணிஷ் பாண்டே 54 ரன்கள், வார்னர் 48 ரன்களும் குவித்தனர். அதனை தொடர்ந்து தற்போது 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக ராகுல் திவாதியா 28 பந்துகளில் 45 ரன்களும், ரியான் பராக் 26 பந்துகளில் 42 ரன்களும் குவித்தனர். ஆட்டநாயகனாக ராகுல் திவாதியா தேர்வானார். இந்த போட்டி முடிந்து பேசிய இளம் வீரர் ரியான் பராக் கூறுகையில் : ராகுல் திவாதியா உள்ளே வந்ததும் எங்களது குறிக்கோள் கடைசி நான்கு ஓவர்களில் ரன்களை அடிக்க வேண்டும் என்பது மட்டுமே இதை நான் அவரிடம் சொன்னேன்.

parag

மேலும் அந்த நான்கு ஓவர்களில் ரஷித் கானுக்கு ஒரு ஓவர் இருந்தாலும் அதனை திவாதியா அடிப்பார் என்று நான் நம்பினேன். அதேபோன்று இறுதியில் நடந்தது. ரசித் கான் இந்த போட்டியிலும் சிறப்பாக பந்து வீசி வந்தார். விக்கெட் மிகவும் ஸ்லோவாக இருந்ததால் நாங்கள் இறுதியில் ரன்களை அடிக்க முடிவு செய்தோம். அதேபோன்று நான் ரஷீத் கான் ஓவரில் அவருக்கு சிங்கிள் எடுத்துக் கொடுத்தால் அவரும் அந்த ஓவரை டார்கெட் செய்தார். இந்த போட்டியை நாங்கள் வெற்றிகரமாக முடித்தது கனவு மாதிரி நிகழ்ந்தது.

Tewatia

இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் அணிக்கு வெற்றியை பெற்றுத் தருவது என்பது என் கனவு அதை நான் இன்று நிறைவேற்றி உள்ளேன். அணிக்கு எப்போதெல்லாம் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலை ஏற்படுகிறதோ அந்த சூழ்நிலையில் விரும்பி விளையாடுகிறேன் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement