- Advertisement -
ஐ.பி.எல்

இந்த சேஸிங்கில் எங்களோட பிளான் இதுதான்.. அதை சரியா செய்ஞ்சிருக்கோம்.. வெற்றிக்கு பிறகு – ரியான் பராக் பேட்டி

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று நியூ சண்டிகார் நகரில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 40-வது போட்டியில் விளையாடியிருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்தி அசத்தியது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

பஞ்சாப் அணிக்கெதிரான வெற்றிக்கு பிறகு : ரியான் பராக் பேட்டி

அதை தொடர்ந்து முதலில் விளையாடிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்களை குவிக்க பின்னர் 223 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 19.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த வெற்றி குறித்து பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பாராக் இந்த சேஸிங்கை எவ்வாறு கட்டமைத்தோம்? என்பது குறித்து சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் அவர் கூறியதாவது : உண்மையிலேயே இந்த போட்டியில் நாங்கள் விக்கெட்டுகளை கையில் வைத்துக் கொண்டு சேசிங்கை கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தோம்.

அதேபோன்று ரன் ரேட்டையும் எந்த இடத்திலும் இறங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் நினைத்தோம். அந்த வகையில் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் மிகச் சிறப்பான துவக்கத்தை அளித்தனர். அவர்கள் கொடுத்த அதிரடியான துவக்கம் எங்களுக்கு சேசிங்கை மேலும் எளிதாக்கியது. இதில் கடினமான சூழல் என்னவென்றால் பவர்பிளே ஓவர்களுக்கு பிறகும் நாங்கள் அந்த முமென்ட்டத்தை கொண்டு செல்ல வேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க : நாங்க போதும்னு தான் நெனச்சோம்.. ஆனா அவங்க பொளந்துட்டாங்க.. முதல் தோல்விக்கு பிறகு – ஷ்ரேயாஸ் ஐயர் பேச்சு

பவர்பிளே ஓவர்களுக்கு பிறகும் ஒரு ஓவருக்கு 10 ரன்கள் என்பது சற்று கடினமான விடயம் தான் ஆனாலும் அதனை நாங்கள் சரியாக செய்ததாக நினைக்கிறோம். இறுதியில் ஷுபம் துபே மற்றும் டோனவன் பெரேரா ஆகியோர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பஞ்சாப் அணியிடமிருந்து வெற்றியை பறித்தனர். இந்த போட்டியில் அடைந்த வெற்றி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என ரியான் பராக் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -