சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 21-லீக் போட்டியில் விளையாடிய ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 57 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து இந்த தொடரில் தங்களது முதல் தோல்வியை பெற்றது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் சன் ரைசர்ஸ் அணி முதலில் விளையாடி 216 ரன்களை குவித்தது.
ஜடேஜாவிற்கு பந்துவீச வாய்ப்பு வழங்காதது ஏன்? : ரியான் பராக் விளக்கம்
பின்னர் அடுத்ததாக 217 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது சன் ரைசர்ஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 19 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்திருந்தது.
இந்த போட்டியின் போது சன் ரைசர்ஸ் அணி மிகச் சிறப்பாக விளையாடி பெரிய ரன் குவிப்பில் ஈடுபட்ட வேளையில் ராஜஸ்தான் அணி சார்பாக விளையாடிய நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜா ஒரு ஓவர் கூட வீசாதது பலரது மத்தியிலும் கேள்வியை எழுப்பியது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து போட்டி முடிந்த பின்னர் பேட்டியளித்த ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் கூறுகையில் : இந்த போட்டியில் சன் ரைசர்ஸ் அணியின் வீரர்கள் மிகச் சிறப்பான துவக்கத்தை கண்டிருந்தனர்.
அதுமட்டும் இன்றி அவர்களது ரன் ரேட்டும் சற்று அதிகமாகவே சென்று கொண்டிருந்ததால் ஜடேஜாவை நான் பந்துவீச அழைக்கவில்லை. அதேபோன்று அந்த நேரத்தில் இஷான் கிஷன் மிகச் சிறப்பாக விளையாடி வந்ததால் அவருக்கு எதிராக ஜடேஜாவை பந்துவீச வைத்து ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று நினைத்தேன். அதோடு ரவி பிஷ்னாய் மீது நம்பிக்கை வைத்து அவரை பந்துவீச வைத்தோம்.
இதையும் படிங்க : முகமது ஷமிக்கு அடுத்து இரண்டாவது வீரராக ஐ.பி.எல் போட்டிகளில் ஜோப்ரா ஆர்ச்சர் – நிகழ்த்திய சாதனை
இந்த மைதானத்தில் அவர்கள் விளையாடிய விதத்தை வைத்து பார்க்கும் போது 30 ரன்கள் கூடுதலாக அடித்து விட்டார்கள் என்று நினைக்கிறேன். அதேவேளையில் நாங்கள் 9 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்தாலும் 160 ரன்கள் வரை சென்றது உண்மையிலேயே நல்ல ஒரு ஆட்டமாக பார்க்கிறோம் என்றும் ரியான் பராக் கூறியது குறிப்பிடத்தக்கது.



