
டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக நேற்று ஜெய்ப்பூர் நகரில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 43-வது லீக் போட்டியில் விளையாடியிருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியிடம் தோல்வியை சந்தித்து இந்த தொடரில் தங்களது நான்காவது தோல்வியை பெற்றது. இருப்பினும் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள அவர்கள் 6 வெற்றியுடன் புள்ளி பட்டியலில் நான்காம் இடத்தில் நீடிக்கின்றனர்.
அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ்அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 225 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி 19.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 226 ரன்கள் குவித்து ஏழ விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் கூறியதாவது : இந்த போட்டியில் நாங்கள் 200 ரன்கள் வரை அடித்தால் போதும் என்று நினைத்தோம். மேலும் அதுவே நல்ல ஸ்கோர் என்றும் கருதினோம். ஆனால் மைதானம் இரண்டாம் பாதியில் மிகவும் மெதுவாக மாறியதால் எங்களால் அவர்களை தடுத்து நிறுத்த முடியவில்லை. அதேபோன்று பந்து வீச்சிலும் மிடில் ஓவர்களில் நாங்கள் நிறைய ரன்களை அவர்களுக்கு வாரி வழங்கி விட்டோம்.
இப்படி மிடில் ஓவர்களில் அதிகளவு பவுண்டரிகளையும், ரன்களையும் வழங்கி விட்டால் போட்டிக்குள் இருப்பது கடினமான ஒன்றாக மாறும். இந்த போட்டியில் சில முடிவுகளை நாங்கள் தவறாக எடுத்ததே தோல்விக்கு காரணம் என்று நினைக்கிறேன். பேட்டிங்கில் எங்களது அணி சிறப்பாகவே செயல்பட்டது. ஏனெனில் துவக்க வீரர்கள் விரைவாக ஆட்டமிழந்தும் இவ்வளவு பெரிய ரன் குவிப்பை நோக்கி நகர்ந்தது நல்ல விஷயம்.
இதையும் படிங்க : ஒரு கேப்டனா எனக்கு இதைவிட வேற என்ன வேணும்? ராஜஸ்தானை வீழ்த்திய பிறகு – அக்சர் படேல் ஹேப்பி
அதேபோன்று டோனவன் பெரேராவை பின் வரிசையில் களமிறக்க காரணம் யாதெனில் : அவர் சற்று தாமதமாக களமிறங்கினால் இறுதி நேரத்தில் அவரால் நிறைய ரன்களை குவிக்க முடியும் என்பதனாலே அப்படி ஒரு முடிவை எடுத்தோம் எனவும் ரியான் பராக் கூறியது குறிப்பிடத்தக்கது.