ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் 19 வயது உடைய இளம் வீரரான ரியான் பராக் நடந்து முடிந்துள்ள 2 போட்டிகளிலும் மிக சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். முதல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக 11 பந்துகளில் 25 ரன்கள் குவித்ததோடு மட்டுமல்லாமல் பவுலிங்கில் ஒரு ஓவர் வீசி 7 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இந்நிலையில் நேற்றைய போட்டியில், டெல்லி அணிக்கு எதிராக விளையாடிய ரியான் பராக் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்டின் விக்கெட்டை கைப்பற்றினார்.

ரியன் பரக் வீசிய ஓவரில் பந்தை அடித்து ரன் ஓட முயற்சித்த ரிசப் பண்டை மிக கனகச்சிதமாக ரன் அவுட் செய்து அசத்தினார். அதன் காரணமாகவே டெல்லி அணியின் ஸ்கோரை 150 ரன்களுக்குள் கட்டுப்படுத்த முடிந்தது. இந்நிலையில் சமீபத்தில் பேசியுள்ள ரியான் பராக், கடந்த ஆண்டு விராட்கோலி தன்னிடம் பேசிய தகவலை பகிர்ந்துள்ளார்.
அப்போது அவர் என்னிடம், நீ எப்பொழுதும் அணிக்காக ஓபனிங் விளையாட போவதில்லை, ஐந்தாவது இடத்திலோ அல்லது ஆறாவது இடத்தில் தான் உன்னை களம் இறக்குவார்கள். எனவே எப்போதும் அதிக ரன்களை அடிப்பது குறித்து நீ அதிகமாக சிந்திக்க வேண்டாம். அணிக்கு தேவைப்படும் ரன்களை நீ அடிக்க வேண்டும். நீ அதிரடியாக அடிக்கும் 20 ரன்களை 30 ரன்களும் அணியின் வெற்றிக்கு மிகவும் தேவையாக இருக்கும் என்று கூறினார்.

அவர் கூறிய அறிவுரை எனக்கு மிக உதவியாக இருந்தது. விளையாட்டின் மீது உள்ள நம்பிக்கையை எனக்கு அதிகப் படுத்தியது என்று கூறியுள்ளார். மேலும் பேசிய ரியான் பராக், ஐபிஎல் தொடர்களில் எம்எஸ் தோனி மற்றும் விராட் கோலி போன்ற வீரர்களுக்கு எதிராக களமிறங்கி விளையாடும் வேலைகளில் எனக்கு நம்பிக்கை அதிகரிக்கிறது.

மேலும் இந்திய வீரர்கள் மட்டுமின்றி சில அயல் நாட்டு வீரர்களுடன்( ஜோப்ரா ஆர்ச்சர், ஜோஸ் பட்லர், டேவிட் மில்லர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ) கலந்து விளையாடுவது மனரீதியான நம்பிக்கையை இன்னும் அதிகப்படுத்துகிறது. பயமில்லாமல் ஆட்டத்தை ஆடுவதற்கும் அது எனக்கு மிக உதவியாக இருக்கிறது என்று இறுதியாக ரியான் பராக் கூறி முடித்தார்.



