விராட் கோலி இப்படி அவுட் ஆகி 6 வருஷம் ஆகுதாம். நேற்றைய போட்டியில் நடந்த சம்பவம் – வைரல் வீடியோ

Kohli
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 43-வது லீக் போட்டி நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 149 ரன்கள் குவித்தது. அந்த அணியின் துவக்க வீரர்களான லூயிஸ் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் கொடுத்த அதிரடியான துவக்கத்தை ராஜஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பயன்படுத்த தவறிவிட்டனர்.

lewis

- Advertisement -

லீவிஸ் 58 ரன்களும், ஜெய்ஸ்வால் 31 ரன்களையும் குவித்து சிறப்பான அடித்தளம் அமைத்தனர். ஆனால் பின்னால் வந்த வீரர்கள் யாரும் பெரிய அளவில் பேட்டிங்கில் சோபிக்காததால் அந்த அணி ஒரு கட்டத்தில் 180-க்கு மேல் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 149 ரன்களை மட்டுமே அடித்தது. பின்னர் 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூர் அணியானது கோலி மற்றும் படிக்கல் ஆகியோரது அதிரடியால் கடகடவென ரன் குவிப்பில் ஈடுபட்டது.

6 ஆவது ஓவரில் படிக்கல் 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறதன் பின்னர் பாரத்துடன் விராட் கோலி கூட்டணி சேர்த்து அதிரடி காட்டினார். இந்நிலையில் இந்த போட்டியின் 7-ஆவது ஓவரின் போது 3வது பந்தை எதிர்கொண்ட நிலையில் அந்த பந்து ஸ்லிப் பகுதியில் கேச்சாக சென்றது. ஆனால் அந்த இடத்தில் நின்ற ரியான் பராக் அந்த கேட்சை பிடிக்க தவறினார்.

bharat

ஆனால் அதே அவரின் ஐந்தாவது பந்தில் மீண்டும் அதே போன்று பந்தை தட்டி விட்டு கோலி ஓட முயன்றார். அப்போது அந்த பந்தை லாவகமாக பிடித்த ரியான் பராக் இம்முறை விராட் கோலி ஓடும் திசையை நோக்கி த்ரோ செய்தார். பந்து நேராக ஸ்டம்பை அடித்ததும் விராட் கோலி ரன் அவுட்டாகி ஆச்சரியத்துடன் வெளியேறினார்.

- Advertisement -

ஐபிஎல் வரலாற்றில் கடந்த 2015 ஆம் ஆண்டு ரன் அவுட்டான கோலி இந்த ஆறு வருடங்களாக இதுவரை ஐபிஎல் கிரிக்கெட்டில் ரன் அவுட் ஆனது இல்லை. அதனை தொடர்ந்து இந்தப் போட்டியில் ரன் அவுட் ஆகி ஆச்சரியத்துடன் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சன் ரைசர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் இன்று விளையாடும் சி.எஸ்.கே அணியின் – பிளேயிங் லெவன் இதோ

அதன் பின்னர் மேக்ஸ்வெல் மற்றும் பாரத் கூட்டணி சிறப்பாக விளையாடி பெங்களூர் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. பாரத் 44 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதே வேளையில் மேக்ஸ்வெல் 30 பந்துகளில் 50 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்து பெங்களூர் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement