- Advertisement -
ஐ.பி.எல்

இதுக்காக 2 மாசம் உழைச்சோம்.. சூர்யவன்சியை விவரிக்க வார்த்தையில்ல.. ஆர்சிபி, சூரியகுமாரிடம் கத்துக்கிறோம்.. பராக் பேட்டி

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 28ஆம் தேதி ஜெய்பூரில் 47வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் குஜராத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த ராஜஸ்தான் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. அப்போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் தமிழக வீரர் சாய் சுதர்சன் 39, கேப்டன் கில் 84, ஜோஸ் பட்லர் 50* ரன்கள் எடுத்த உதவியுடன் 210 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.

அதைத் துரத்திய ராஜஸ்தான் சரவெடியாக விளையாடி 15.5 ஓவரில் 212/2 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. அந்த அணிக்கு 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி குஜராத்தை அடித்து நொறுக்கி 35 பந்தில் சதத்தை தொட்டு 101 (38) ரன்கள் குவித்தார். அவருடன் ஜெய்ஸ்வால் 70* (40), ரியான் பராக் 32* (15) ரன்கள் விளாசினர்.

- Advertisement -

மிரட்டிய சூர்யவன்சி:

அதனால் ஐபிஎல் வரலாற்றில் 200+ ரன்களை குறைந்த ஓவரில் வேகமாக துரத்திய அணி என்ற சரித்திர சாதனையை ராஜஸ்தான் படைத்துள்ளது. இந்நிலையில் 2 மாதங்களாக ராஜஸ்தான் அணி சூர்யவன்சியுடன் சேர்ந்து கடினமாக உழைத்ததாக கேப்டன் ரியான் பராக் கூறியுள்ளார். அந்த உழைப்பு வீணாகத வகையில் இன்று சூரியவன்சி விவரிக்க முடியாத சதத்தை அடித்துள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.

மேலும் ஆர்சிபி, சூரியகுமார் யாதவ் உட்பட ஒவ்வொரு நாளும் மற்ற அணிகளையும் பார்த்து முன்னேறுவதாக அவர் கூறியுள்ளார். இது பற்றி பராக் பேசியது பின்வருமாறு. “இது அற்புதமானது. அவருடன் நாங்கள் 2 மாதங்கள் நேரத்தை செலவிட்டு எங்களால் அவரை எப்படி முன்னேற்ற முடியும் என்பதைப் பார்த்தோம். இன்று உலகத்தரம் வாய்ந்த பவுலர்கள் நிறைந்த குஜராத்துக்கு எதிராக அவர் விளையாடியதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது”

- Advertisement -

பராக் மகிழ்ச்சி:

“நாங்கள் எங்களுடைய ஆட்டத்தை கடந்தப் போட்டியில் இருந்து மாற்றியுள்ளோம். பேட்டிங்கில் எப்படி ஆட்டத்தை முன்னதாகவே முடிக்கலாம் என்று சிந்தனை செய்தோம். பேட்டிங்கில் அதிரடியாக விளையாடினோம். நிறைய பயிற்சிகளை செய்த நாங்கள் இன்று அதை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளோம். அது எங்களுக்கு நன்றாக வேலை செய்தது”

இதையும் படிங்க: ஜெய்ஸ்வால் தான் இதை சொன்னாரு.. எனக்கு பயமில்ல.. 14 வயதில் சதமடித்தது பற்றி ஆட்டநாயகன் சூர்யவன்சி பேட்டி

“ஐபிஎல் தொடரைப் பார்த்து நீங்கள் ஒவ்வொரு நாளும் கற்றுக்கொள்ளலாம். ஆர்சிபி எப்படி தொடர்ச்சியாக அசத்துகிறது, சூரியகுமார் பாய் எப்படி விஷயங்களை செய்கிறார் என்மனவற்றை கற்றுக் கொள்ளலாம். இது போன்ற பெரிய வெற்றியைத் தான் நாங்கள் தேடிக் கொண்டிருந்தோம். அது ஒருதலைபட்சமாக வந்ததில் எனக்கு மகிழ்ச்சி. பிட்ச்சை பார்த்து அடுத்தப் போட்டியில் நாங்கள் முடிவுகளை எடுப்போம்” என்று கூறினார்.

- Advertisement -