KKR vs RR : டக் அவுட்டிலிருந்து தப்பித்து மேட்ச் வின்னரரான ராஜஸ்தான் இளம் வீரர் – விவரம் இதோ

ஐ.பி.எல் தொடரின் 43 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும், ஸ்மித் தலைமை

Riyan
- Advertisement -

நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த போட்டியின் வெற்றிக்கு முக்கியமாக திகழ்ந்தவர் ரியான் பராக் எனும் இளம் வீரரே. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்த ராஜஸ்தான் அணி 7.2 ஓவர்களில் 63 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து நின்றது. அப்போதிருந்து ராஜஸ்தான் அணியை சீராக ரன்ரேட் விகிதத்தை சரிசெய்து போட்டியை இறுதிவரை எடுத்து சென்றார்.

Riyan 1

- Advertisement -

இதிலும் குறிப்பாக ரியான் ரன்கள் எடுக்காமல் இருந்தபோது அவர் கொடுத்த எளிதான கேட்சை சுனில் நரேன் தவறவிட்டார். அதன்பின் பிரமாதமாக ஆடிய அவர் ஸ்டோக்ஸ், கோபால், பின்னி மற்றும் ஆர்ச்சர் ஆகியோரது உதவியுடன் சிறிய பாட்னர்ஷிப் அமைத்து வெற்றி இலக்கிற்கு அருகில் அணியை அழைத்து வந்து 31 பந்தில் 47 ரன்களை குவித்தார். அவர் 47 ரன்கள் குவிந்திருந்தபோது வெற்றிக்கு 9 ரன்களே தேவைப்பட்டது. அப்போது ரசலின் பந்துவீச்சில் எதிர்பாரா விதமாக ஹிட் விக்கெட் ஆகி வெளியேறினார்.

இறுதிவரை சிறப்பாக ஆடிய ரியான் ஐ.பி.எல் போட்டிகளில் தனது முதலாவது அரைசதத்தை அடித்து அணியை வெற்றிபெற வைப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் எதிர்பாரா விதத்தில் அவுட் ஆகிவெளியேறினார். பிறகு வெற்றிக்கு தேவையான 9 ரன்களை கடைசி ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் பவுண்டரி மற்றும் சிக்ஸ் என 10 ரன்களை குவித்து ஆர்ச்சர் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.

Riyan 2

ஐ.பி.எல் தொடரின் 43 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும், ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதின.

Smith

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 97 ரன்களை அடித்தார். இதனால் ராஜஸ்தான் அணிக்கு 176ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

Riyan

தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி இளம் வீரர் ரியான் பராக் மற்றும் ஆர்ச்சர் ஆகியோரது அபார ஆட்டத்தினால் 19.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களை குவித்து வெற்றிபெற்றது. அதிகபட்சமாக ரியான் பராக் 31 பந்துகளில் 47 ரன்களை குவித்தார். மேலும், ஆர்ச்சர் 12 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 2 சிக்சருடன் 27 ரன்களை குவித்தார். 4 ஓவர்களில் 20 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்து சிறப்பாக பந்துவீசிய ராஜஸ்தான் வீரர் வருண் ஆரோன் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Advertisement