RCB vs RR : பெங்களூரு அணி வீரரை டான்ஸ் ஆடி வெறுப்பேற்றி வழியனுப்பிய ரியான் பராக்

ஐ.பி.எல் தொடரின் 49 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு துவங்க வேண்டிய போட்டி மழையின் காரணமாக 11.26 மணிக்கு துவங்கியது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு

Riyan
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 49 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு துவங்க வேண்டிய போட்டி மழையின் காரணமாக 11.26 மணிக்கு துவங்கியது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதின.

இந்த போட்டியில் மழையின் குறுக்கீடு காரணமாக போட்டி தாமதமாக துவங்கியதால் போட்டி 20 ஓவர்களில் இருந்து 5 ஓவர்களாக குறைக்கப்பட்டது. பின்னர் முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 5 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்களை அடித்தது. கோலி 7 பந்துகளில் 25 ரன்களை குவித்தது. டிவில்லியர்ஸ் 4 பந்துகளில் 10 ரன்களை அடித்தார். ராஜஸ்தான் அணி சார்பாக ஷ்ரேயாஸ் கோபால் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.

- Advertisement -

பின்னர் 63 ரன்கள் என்ற இலக்குடன் ஆட ஆரம்பித்த ராஜஸ்தான் அணி 3.2 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 41 ரன்களை குவித்திருக்கும்போது மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதனால் முதல் அணியாக பெங்களூரு அணி தொடரில் இருந்து வெளியேறியது.

இந்த போட்டியில் பெங்களூரு அணி வீரரான குர்கீரத் ஆடும்போது ரியான் பராக் ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறினார். அப்போது ரியான் விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் டான்ஸ் ஆடி அவரை வெறுப்பேற்றுவது போல வழி அனுப்பி வைத்தார்.

இந்த வீடியோவினை ரசிகர்கள் அதிக அளவில் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். 17 வயதான ரியான் பராக் இந்த தொடரில் அறிமுகமாகி சிறப்பாக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement