க்றிஸ் கெயிலுக்கு எதிராக கேதார் ஜாதவ் போல பந்துவீசிய பராக். எச்சரித்த அம்பயர் – வைரலாகும் வீடியோ

Parag
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரில் நடந்த நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 221 ரன்கள் அடிக்க, 222 ரன்கள் என்ற இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணி 217 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 4 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டி கடைசி பந்து வரை இரு அணிகளுக்கும் சம வாய்ப்போடு சென்றதால் போட்டி ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது.

rrvspbks

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் 19 வயதான ரியான் பராக் ராஜஸ்தான் அணிக்காக இந்த முதல் போட்டியிலேயே பந்துவீசினார். அதிரடி வீரரான இவர் அவ்வப்போது பந்து வீசுவதும் உண்டு. அப்படி நேற்றைய போட்டியில் பந்துவீசிய அவர் கிறிஸ் கெய்ல்க்கு எதிராக வீசிய ஒரு பந்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொதுவாகவே சர்வதேச கிரிக்கெட்டில் கேதர் ஜாதவ் மற்றும் மனோஜ் திவாரி ஆகியோர் தான் இதுபோன்ற அன்டர் ஆரம் பந்துகளை வீசுவார்கள். ஆனால் நேற்றைய போட்டியில் 10-வது ஓவரை வீசிய இவர் கெயிலுக்கு எதிராக அவரது அதிரடிக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் அன்டர் ஆர்ம் பந்தினை வீசினார்.

அந்த பந்தில் சிங்கிள் எடுத்த கெயில் மீண்டும் பேட்டிங்கிற்கு வரும்பொழுது சாதாரணமான ஒரு பந்தில் ஆட்டம் இழந்து வெளியேறினார். இந்நிலையில் தற்போது ரியான் பராக் வீசிய அந்த அண்டர் ஆர்ம் பந்து இணையத்தில் வீடியோவாக வைரலாகி வருகிறது. மேலும் இந்த பந்தினை அவர் வீசும் போது களத்தில் இருந்த அம்பயர் இதுபோல கைகளை முழுவதுமாக சுற்றாமல் பந்துவீச கூடாது நார்மலான முறையில் பந்துவீசுங்கள் என அம்பயர் எச்சரித்து குறிப்பிடத்தக்கது.

gayle 1

ரியான் பராக் வீசிய அதே ஓவரில் ஆட்டமிழந்த கெயில் 28 பந்துகளுக்கு 40 ரன்களை குவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ராகுலுடன் பார்ட்னர்ஷிப் அமைத்தவர் 7.1 ஓவர்களில் 67 ரன்களையும் சேர்த்து பார்ட்னர்ஷிப் அமைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement