KKR vs RR : யார்க்கர் பந்தில் மட்டுமல்ல புல் ஷாட்டிலும் ஹெலிகாப்டர் ஷாட்டை ஆடிய ரியான் – வீடியோ

ஐ.பி.எல் தொடரின் 43 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும், ஸ்மித் தலைமை

Riyan-Parag
- Advertisement -

நேற்று நடந்த கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணியின் இளம் வீரரான ரியான் பராக் வெற்றிக்கு காரணமாக இருந்தார். நேற்று இவரது ஆட்டம் அபாரமாக இருந்தது. அதிலும் வழக்கமாக யார்க்கர் அல்லது லெந்த் பந்துகளில் தோனி அடிக்கும் ஷாட் போன்று நேற்று புல் ஷாட்டில் ஹெலிகாப்டர் ஷாட் அடித்து மிரட்டினார் ரியான் பராக். இதோ அந்த வீடியோ :

- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 43 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும், ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 97 ரன்களை அடித்தார். இதனால் ராஜஸ்தான் அணிக்கு 176ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி இளம் வீரர் ரியான் பராக் மற்றும் ஆர்ச்சர் ஆகியோரது அபார ஆட்டத்தினால் 19.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களை குவித்து வெற்றிபெற்றது. அதிகபட்சமாக ரியான் பராக் 31 பந்துகளில் 47 ரன்களை குவித்தார். மேலும், ஆர்ச்சர் 12 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 2 சிக்சருடன் 27 ரன்களை குவித்தார். 4 ஓவர்களில் 20 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்து சிறப்பாக பந்துவீசிய ராஜஸ்தான் வீரர் வருண் ஆரோன் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Advertisement