ஊரடங்கு விதியை மீறி வெளியே வந்த இந்திய கிரிக்கெட் வீரருக்கு தண்டனை கொடுத்து அசத்திய போலீஸ்- ரூல்ஸ் உங்களுக்கும் பொருந்தும்

Rishi-1
- Advertisement -

கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் கடந்த மாதம் 24ம் தேதியில் இருந்து ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் இந்த 21 நாட்களில் பொதுமக்கள் பெரிதாக வெளியில் நடமாட வேண்டாம் எனவும் அத்தியாவசிய பொருட்களை தவிர வேறு எந்த வேலைக்காக வெளியில் வர வேண்டாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அதனை மீறி தேவையில்லாமல் வெளியே வருபவர்களுக்கு காவல் துறை வினோதமான சில தண்டனைகளை வழங்கி வருகிறது.

Ind

- Advertisement -

ஆனால் சாதாரண பொதுமக்கள் பலரும் இந்த நோய் தொற்றின் தீவிரத்தை அறியாமல் வெளியே வந்து வீதியில் உலா வந்தனர். இதன் காரணமாக விதிமுறையை மீறியவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டது. வெளியே செல்ல வேண்டுமானால் அனுமதிச்சீட்டு போன்ற பல விஷயங்கள் பின்பற்றப்பட்டு வந்தது. அதனை பின்பற்றவில்லை என்றால் காவலர்கள் அவர்களுக்கு பல தண்டனைகளை கொடுத்து வருகின்றனர்.

சாதாரண பொதுமக்கள் வெளியில் வந்தால் காவல்துறை அவர்களை தண்டித்து வந்தது. இந்நிலையில் இமாச்சல பிரதேச அணியின் கிரிக்கெட் வீரர் மற்றும் இந்திய அணிக்காக ஆடிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிஷி தவான் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வந்து சுற்றியுள்ளார். இதனை கண்காணித்த காவல்துறை அவரை பிடித்து 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

Rishi

முன்னதாக இந்திய அணிக்காக 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் ஒரு டி20 போட்டியிலும் விளையாடியுள்ளார். ரிஷி தவான் மேலும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது. பொதுமக்களும் பிரபலங்களும் ஒன்றுதான் என்று இந்த செயல் மூலம் காவல்துறை தங்களது கடமையை நிறைவேற்றி உள்ளனர்.

- Advertisement -

மக்கள் வீட்டில் இருந்து தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கைப்பட்டு வரும் நிலையில் கிரிக்கெட் வீரரான இவர் அலட்சியமாக சுற்றிவந்ததால் இவருக்கு இந்த அபராதம் வழங்கப்பட்டதாக காவல்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rishi 2

கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது வீட்டில் இருந்து மக்களுக்கு விழிப்புணர்வு செய்து வரும் இவ்வேளையில் கிரிக்கெட் வீரர் ஒருவர் வெளியே சுற்றி திரிந்து அபராதம் கட்டியது தற்போது சமூக வலைத்தளத்தில் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது குறிப்பிடடதக்கது.

Advertisement