காயமடைந்துள்ள ரிஷப் பண்ட் 5வது நாளில்.. கில் – ராகுல் போல இந்தியாவுக்கு விளையாடுவாரா? கோட்டக் பதில்

Sittanshu Kottak 2
- Advertisement -

மான்செஸ்டர் நகரில் இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா விளையாடி வருகிறது. ஜூலை 23ஆம் தேதி துவங்கிய அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 387 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61, ஜெய்ஸ்வால் 58, ரிஷப் பண்ட் காயத்துடன் விளையாடி 54 ரன்கள் எடுத்தார்கள். இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகள் எடுத்தார்.

அடுத்து விளையாடிய இங்கிலாந்து 669 ரன்கள் குவித்து முன்னிலை பெற்றது. அதிகபட்சமாக ஜோ ரூட் 150, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 141 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்ததாக விளையாடிய இந்திய அணிக்கு சாய் சுதர்சன், ஜெய்ஸ்வால் ஆரம்பத்திலேயே டக் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.

- Advertisement -

ரிஷப் பண்ட் விளையாடுவாரா:

அதனால் 0/2 என ஆரம்பத்திலேயே சரிந்த இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை சந்திக்குமோ என்று ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்தனர். அப்போது ஜோடி சேர்ந்த கேப்டன் கில் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் நிதானமாக விளையாடினார்கள். அவர்களுடைய நல்ல ஆட்டத்தால் 4வது நாள் முடிவில் இந்தியா 174/2 ரன்களை எடுத்துள்ளது. இன்னும் 137 ரன்கள் பின்தங்கியுள்ள இந்தியா தோல்வியை தவிர்க்க 5வது நாள் முழுவதும் விளையாட வேண்டியுள்ளது.

இன்றைய நாளில் ரிஷப் பண்ட் விளையாடினால் அது இந்திய அணிக்கு கூடுதல் பலமாக அமையும். இருப்பினும் காயமடைந்த அவர் விளையாடுவாரா என்பது சந்தேகமாக இருக்கிறது. இந்நிலையில் முதல் இன்னிங்ஸை போல நாட்டுக்காக ரிசப் பண்ட் காயத்தை பொருட்படுத்தாமல் மீண்டும் விளையாடுவார் என்று இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்சு கோட்டக் அறிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

கில் – ராகுலுக்கும் பாராட்டு:

“ரிஷப் பண்ட் நாளை பேட்டிங் செய்வார். 5வது நாள் பிட்ச்சில் ஒரு சில பந்துகள் சுழலலாம். மற்ற படி அது பேட்டிங் செய்ய நன்றாகவே இருக்கும். ராகுல் – கில் நிறைய நம்பிக்கை, உறுதியுடன் விளையாடினார்கள். ஆரம்பத்திலேயே நீங்கள் 2 விக்கெட்டுகளை இழந்தால் சூழ்நிலை கடினமாக இருக்கும். கில் – ராகுல் உணவு இடைவெளியில் முதல் 10 – 15 ஓவர்கள் பார்த்து விட்டு பின்னர் நாம் நமது வழியில் விளையாடலாம் என்ற நம்பிக்கையைக் கொண்டிருந்தார்கள்”

இதையும் படிங்க: 697 ரன்ஸ்.. கோலி, யூசுப்பை முந்தி 2 சாதனை படைத்த கில்.. ராகுலுடன் சேர்ந்து இந்தியாவை காப்பாற்றுவாரா?

“கடந்த ஆஸ்திரேலிய தொடரிலிருந்தே கில் சிந்தனை செயல்முறை மற்றும் பேட்டிங் செய்யும் விதம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. பிட்ச்சில் எந்த விதத்தில் நாம் விளையாட வேண்டும் என்பதை அவர் முடிவெடுத்ததற்கு பாராட்டு கொடுக்க வேண்டும். சில ஷாட்டுகளை அடித்த அவர் சில தேவையற்ற ஷாட்டுகளை விட்டார்” என்று கூறினார்.

Advertisement