- Advertisement -
இந்திய கிரிக்கெட்

எவ்ளோ சொதப்பினாலும் அவர் டி20 உ.கோ தொடர்ல ஆடுவாரு – உறுதியாக கூறும் ராகுல் டிராவிட்

ஐபிஎல் 2022 தொடருக்குப் பின் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா பங்கேற்று வந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 2 – 2 என்ற கணக்கில் சமனில் முடிந்துள்ளது. ஜூன் 9இல் துவங்கிய இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற தென்னாப்பிரிக்கா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று அசத்தியது. அதனால் சொந்த மண்ணில் தலைக்குனிவுக்கு உள்ளான இந்திய அணியினர் அதற்காக பின்வாங்காமல் அடுத்த 2 போட்டிகளில் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் துல்லியமாக செயல்பட்டு அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று தென் ஆப்பிரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்தனர்.

அதனால் இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான கடைசி போட்டி ஜூன் 19இல் பெங்களூருவில் நடைபெற்றது. மழையால் 19 ஓவர்களாக குறைக்கப்பட்டு 7.50 மணிக்கு துவங்கிய அந்த போட்டியில் 3.3 ஓவரில் 28/2 என இந்தியா தடுமாறிக் கொண்டிருந்த போது மீண்டும் வந்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வெளுத்து வாங்கிய மழையால் இப்போட்டி ரத்து செய்யப்படுவதாக அம்பயர்கள் அறிவித்தனர். அதனால் இரு அணிகளும் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு கோப்பை பகிர்ந்தளிக்கப்பட்டது.

- Advertisement -

விமர்சனத்தில் பண்ட்:
முன்னதாக இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மாவின் இடத்தில் பொறுப்புடன் செயல்பட வேண்டிய ரிஷப் பண்ட் சுமாராகவே செயல்பட்டார். இந்தியாவுக்காக முதல் முறையாக கேப்டன்ஷிப் செய்த அவர் எந்த பவுலரை எப்போது பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படை முடிவெடுக்க முடியாமல் தவித்தார். மேலும் முதல் சில ஓவர்களில் அதிக ரன்களை வழங்கினார்கள் என்பதற்காக சஹால், அக்சர் படேல் போன்றவர்களுக்கு முழுமையான 4 ஓவர்களை வழங்காத அவர் துல்லியமாக பந்து வீசியும் ஆவேஷ் கான் போன்றவர்களுக்கு ஒருசில போட்டிகளில் 4 ஓவர்களை வழங்கவில்லை.

அதனால் முன்னாள் வீரர்களின் விமர்சனங்களை வாங்கிக் கட்டிக் கொண்ட அவர் ஒரு பேட்ஸ்மேனாக எந்த ஒரு போட்டியிலும் பொறுப்பை காட்டாமல் 4 போட்டிகளிலும் சொல்லி வைத்தார் போல் அவுட் சைட் ஆப் ஸ்டம்ப் பந்தில் தொடர்ச்சியாக அவுட்டாகி வெறும் 57 ரன்களை மட்டுமே எடுத்தார். அதனால் பேட்டிங்கில் கொஞ்சம் கூட முன்னேறவில்லை என்று ஜாம்பவான் சுனில் கவாஸ்கரின் விமர்சனத்துக்கும் உள்ளான அவர் மோசமாக செயல்பட்டதால் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -

டிராவிட் ஆதரவு:
ஏனெனில் இதே அணியில் தினேஷ் கார்த்திக், இஷான் கிசான் என 2 விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் டி20 உலக கோப்பையில் இடம் பிடிக்கும் அளவுக்கு அற்புதமாக பேட்டிங் செய்தார்கள். இந்நிலையில் ஒருசில போட்டிகளை வைத்து ஒரு வீரரின் மதிப்பை எடை போட முடியாது என்று தெரிவித்துள்ள பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சொதப்பினாலும் டி20 உலக கோப்பையில் ரிஷப் பண்ட் தான் இந்திய அணியின் முதன்மையான விக்கெட் கீப்பர் என்று மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

இந்த கடினமான தருணத்தில் பண்ட்க்கு ஆதரவளித்து அவர் பேசியது பின்வருமாறு. “தன்னிச்சையாக இன்னும் அவர் சில ரன்களை எடுக்க விரும்பினார். ஆனால் அதற்காக அவர் கவலைப்படவில்லை. மேலும் அடுத்த சில மாதங்களில் எங்களின் பெரிய திட்டங்களில் அவர் மிகப் பெரிய பகுதியாக நிச்சயமாக இருப்பார். விமர்சன ரீதியில் நான் பேச விரும்பவில்லை. மிடில் ஓவர்களில் அட்டாக் செய்து போட்டியை மேலும் எடுத்துச் செல்லக்கூடிய பேட்ஸ்மேன்கள் நமக்கு தேவை. இருப்பினும் சில நேரங்களில் ஒருசில போட்டிகளை வைத்து ஒருவரை மதிப்பிடுவது கடினமாகும்” என்று கூறினார்.

- Advertisement -

நல்ல ஐபிஎல்:
இந்தியாவுக்காக இதுவரை 48 போட்டிகளில் 741 ரன்களை 23.1 என்ற சுமாரான சராசரியில் மட்டுமே எடுத்துள்ள அவர் ஐபிஎல் தொடரில் 98 போட்டிகளில் 2838 ரன்களை 34.6 என்ற நல்ல சராசரியில் எடுத்து வருகிறார். சமீபத்திய ஐபிஎல் தொடரிலும் 340 ரன்களை 158 என்ற நல்ல ஸ்டிரைக் ரேட்டில் எடுத்த அவர் ஐபிஎல் தொடரிலும் இந்தியாவுக்காகவும் 3 வருடங்களுக்கு முன் தடுமாறினாலும் தற்போது நிறைய முன்னேறியுள்ளதால் அவர் மீது தங்களுக்கு நம்பிக்கை உள்ளது என்று தெரிவிக்கும் ராகுல் டிராவிட் நிச்சயம் அவர் டி20 உலக கோப்பையில் விளையாடுவார் என்று மறைமுகமாக தெரிவித்தார்.

இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “சராசரி அடிப்படையில் பார்க்காமல் ஸ்ட்ரைக் ரேட் அடிப்படையில் பார்த்தால் அவருக்கு நல்ல ஐபிஎல் அமைந்தது. 3 வருடங்களுக்கு முன்பு இருந்த ஐபிஎல் புள்ளி விவரங்களை அவர் தற்போது முன்னேற்றியுள்ளார். அதேபோன்றதொரு வளர்ச்சியை சர்வதேச அளவிலும் அவர் எட்டுவார் என்று நம்புகிறோம். அட்டாக் செய்து பேட்டிங் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் சில சமயங்களில் அவர் தவறு செய்துவிட்டார்.

இதையும் படிங்க : உலககோப்பை செமிபைனல், பைனல்களில் ஆட்டநாயகன் விருது வென்ற – 3 மகத்தான ஜாம்பவான்கள்

ஆனால் இடதுகை பேட்ஸ்மேனாக இருக்கும் அவரிடமுள்ள பவருக்கு மிடில் ஓவரில் அவர் எங்களுடன் இருப்பது முக்கியமாகும். எனவே இந்திய பேட்டிங் வரிசையில் முக்கியமானவராக இருக்கும் அவர் ஒருசில நல்ல இன்னிங்ஸ்களையும் விளையாடியுள்ளார்” என்று கூறினார்.

- Advertisement -
Published by