- Advertisement -
இந்திய கிரிக்கெட்

52 ரன்கள் பாக்கி.. இங்கிலாந்து தொடரின் முதல் போட்டியிலேயே சாதனை படைக்க காத்திருக்கும் – ரிஷப் பண்ட்

இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் கடந்த 2018-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 43 போட்டிகளில் விளையாடி 6 சதம் மற்றும் 15 அரைசதம் என 2948 ரன்கள் குவித்துள்ளார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவரது ஆட்டம் சுமாராகவே இருந்து வருகிறது. ஆனாலும் டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அவர் திகழ்ந்து வருகிறார்.

சாதனைக்காக காத்திருக்கும் ரிஷப் பண்ட் :

அதிலும் குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை முன்னாள் கேப்டனான தோனியை விட இவரது ஆட்டம் மிகச் சிறப்பாக இருக்கிறது. இந்திய மைதானங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் மிகச் சிறப்பாக ஆடும் ரிஷப் பண்ட் பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகளுக்கு மிக முக்கிய காரணமாகவும் இருந்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் எதிர்வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இந்திய அணியிலும் இடம் பிடித்துள்ள அவருக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக தற்போது இந்திய அணியின் துணை கேப்டனாக விளையாட இருக்கும் ரிஷப் பண்ட் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரின் முதல் போட்டியிலேயே மாபெரும் சாதனையை நிகழ்த்த காத்திருக்கிறார்.

அந்த வகையில் அவர் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : இந்திய அணிக்காக இதுவரை 43 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 2948 ரன்கள் குவித்துள்ளார். இந்த இங்கிலாந்து தொடரில் மேலும் அவர் 52 ரன்களை அடிக்கும் பட்சத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 3000 ரன்களை பூர்த்தி செய்வார்.

- Advertisement -

ஏற்கனவே இங்கிலாந்து அணிக்கு எதிராக இரண்டு சதங்களை விளாசியுள்ள அவர் இந்த தொடரிலும் மிக முக்கியமான வீரராக பார்க்கப்படுவதால் நிச்சயம் இந்த தொடரிலும் அவர் தனது அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நம்பலாம். டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரை அதிரடியாக விளையாடி தனி ஒரு வீரராக ஆட்டத்தை மாற்றும் திறன் கொண்ட ரிஷப் பண்ட் இந்த இங்கிலாந்து தொடரிலும் ரசிகர்களை தனது அதிரடியின் மூலம் மகிழ்விப்பார் என்று நம்பலாம்.

இதையும் படிங்க : இங்கிலாந்து தொடரில் சாதனை நிகழ்த்த காத்திருக்கும் கே.எல் ராகுல் மற்றும் சிராஜ் – விவரம் இதோ

மேலும் இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்திய அவருக்கு மீண்டும் பார்முக்கு திரும்ப இந்த இங்கிலாந்து தொடர் வழிவகுத்துள்ளது. இந்த தொடரில் அவர் ஒருவேளை சோபிக்காமல் போனால் நிச்சயம் அவரது இடத்திற்கு ஆபத்தும் ஏற்பட வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -