இந்தியா கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் முன்னணி வீரரான விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள வேளையில் தற்போது சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியானது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட மிகப்பெரிய டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.
கே.எல் ராகுல் மற்றும் சிராஜ் ஆகியோர் நிகழ்த்தவிருக்கும் சாதனை :
அனுபவ வீரர்கள் இன்றி சென்றுள்ள இந்த இளம் அணிக்கு இந்த தொடர் சவாலாக அமைந்திருக்கும் வேளையில் இந்த தொடரில் இந்திய அணியின் பல்வேறு வீரர்கள் சில தனிப்பட்ட சாதனைகளுக்காக காத்திருக்கின்றனர். அந்த வகையில் இந்த இங்கிலாந்து தொடரில் முன்னணி வீரரான கே.எல் ராகுல் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் ஆகிய இருவரும் சில குறிப்பிட்ட சாதனைகளை எட்ட காத்திருக்கின்றனர்.
அந்த வகையில் எதிர்வரும் இந்த 5 போட்டிகள் கொண்ட இங்கிலாந்து தொடரில் கே.எல் ராகுல் இன்னும் 435 ரன்கள் அடித்தால் சர்வதேச கிரிக்கெட்டில் 9000 ரன்களை பூர்த்தி செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை இந்திய அணிக்காக 215 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 17 சதம் மற்றும் 57 அரைசதம் என 8565 ரன்கள் குவித்துள்ளார்.
மேலும் 435 ரன்களை இந்த தொடரில் அவர் குவிக்கும் பட்சத்தில் 9000 ரன்களை பூர்த்தி செய்வார். அதேபோன்று வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் இன்னும் 15 விக்கெட்டுகளை இந்த தொடரில் எடுக்கும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை பூர்த்தி செய்வார்.
இதுவரை இந்திய அணிக்காக 96 சர்வதேச ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 185 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று மற்றொரு அனுபவ நட்சத்திர ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா இந்த தொடரில் இன்னும் 309 ரன்களை குவிக்கும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் 7000 ரன்களை பூர்த்தி செய்வார்.
இதையும் படிங்க : இந்த வாய்ப்பை யூஸ் பண்ணி முகமது சிராஜ் பெருசா சாதிக்கனும்.. அதுதான் என் விருப்பம் – பரத் அருண் பேட்டி
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது வரும் ஜூன் 20-ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் துவங்க இருக்கிறது. இதன்காரணமாக இந்திய அணியின் வீரர்கள் தற்போது தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.



